– Advertisement –
நாட்டு காய்கறிகளில் அதிக அளவு சத்துக்கள் இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். ஒவ்வொரு காய்களையும் நாம் சாப்பிடும் பொழுது அந்த காய்களின் சத்துக்களால் நம் உடலுக்கு பல அற்புதமான நன்மைகள் உண்டாகிறது என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் இன்றைய காலத்தில் பலரும் நாட்டு காய்கறிகளுக்கு மாறி அதை சமைத்து சாப்பிட முற்படுகிறார்கள். இயற்கையோடு வாழ வேண்டும் என்ற கோட்பாட்டுக்கிணங்க அந்த காய்கறிகளை ஒரு சிலர் சமைக்காமல் கூட சாப்பிடுகிறார்கள். அந்த வகையில் பலரும் மறந்து போன ஒரு காய்கறியாக திகழ்வதுதான் கொத்தவரங்காய்.
கொத்தவரங்காயில் பல அற்புதமான சத்துக்கள் இருக்கின்றது. கொத்தவரங்காயை தொடர்ச்சியாக நாம் சாப்பிடும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய நரம்புகள் வலுப்படுகின்றன. ரத்த அழுத்தம் குறைகிறது. ரத்த சர்க்கரையின் நோய் கட்டுக்குள் இருக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று கூறிக் கொண்டே செல்லலாம். இவ்வளவு அற்புதம் மிகுந்த இந்த கொத்தவரங்காயை நாம் பொறியலாக செய்து கொடுக்கும் பொழுது பலரும் சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களும் விரும்பி சாப்பிடுவதற்கு கொத்தவரங்காயை எப்படி துவையலாக செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
கொத்தவரைக்காய் – 15வெங்காயம் – ஒன்றுஎண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்புளி – நெல்லிக்காய் அளவு,காய்ந்த மிளகாய் – 2பச்சை மிளகாய்- 1தேங்காய் – 2 பத்தைஉப்பு – தேவையான அளவுகொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் வெங்காயத்தை நறுக்கி சேர்த்து எண்ணெய் ஊற்றாமல் நன்றாக நிறம் மாறும்வரை வதக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் உளுந்து, புளி, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும். உளுந்து சிவந்த பிறகு இதில் தேங்காய் போட்டு வதக்க வேண்டும். தேங்காயின் நிறம் மாறியதும் நறுக்கி வைத்திருக்கும் கொத்தவரங்காயையும் அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
– Advertisement –
கொத்தவரங்காய் நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு அதை ஆற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து ஆற வைத்திருந்த இந்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு நாம் ஏற்கனவே வதக்கி வைத்திருந்த வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி இவற்றை சேர்த்து இரண்டு சுற்று மட்டும் சுற்ற வேண்டும். பிறகு இதை அப்படியே கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். கொத்தவரங்காய் துவையல் தயாராகிவிட்டது. இதை சுடு சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பிணைந்து சாப்பிடும் பொழுது இதன் சுவை ஆஹா ஓஹோ என்று புகழும் அளவிற்கு இருக்கும்.
இதையும் படிக்கலாமே:இன்ஸ்டன்ட் முட்டை கார தோசை
நம்மால் இயன்ற அளவு நாமும் நம்முடைய குடும்பத்தாரும் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய நாட்டு காய்கறிகளை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் வேண்டாம் என்று ஒதுக்க கூடிய காய்கறிகளையும் இந்த முறையில் துவையலாக செய்து தந்து அவர்களை சாப்பிட வைக்க முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam