கோதுமை அடை தோசை ரெசிபி | Godhumai adai dosai recipe

கோதுமை அடை தோசை ரெசிபி | Godhumai adai dosai recipe

Qries

– Advertisement –

அருமையான சுவையில் ஹெல்தியான கோதுமை அடை தோசை இந்த முறையில் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். சாதாரணமாக கோதுமை மாவில் தோசை செய்து கொடுத்தால் பிடிக்காது என்பவர்கள், இந்த முறையில் சாப்பிட்டு பாருங்கள், ரசித்து சாப்பிடுவீர்கள். ஹெல்தியான கோதுமை அடை தோசை எப்படி தயார் செய்வது? என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவை தொடர்ந்து பார்த்து அறிந்து கொள்வோம் வாருங்கள்.
கோதுமை அடை தோசை செய்ய தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – ஒரு கப்அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்தண்ணீர் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவுகேரட் – ஒன்றுபெரிய வெங்காயம் – ஒன்றுதக்காளி – ஒன்றுகருவேப்பிலை – ஒரு கொத்துமல்லித்தழை – சிறிதளவுமஞ்சள் தூள் – ஒரு சிட்டிகைசீரகம் – ஒரு ஸ்பூன்மிளகு – ஒரு ஸ்பூன்
– Advertisement –

கோதுமை அடை தோசை செய்முறை விளக்கம் :
கோதுமை அடை தோசை செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தோசை செய்வதற்கு முதலில் ஒரு பௌலில் ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பெரிய கேரட்டை தோல் சீவி மெல்லியதாக துருவி இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். ஒரு பெரிய வெங்காயத்தை தோல் சீவி பொடி பொடியாக நறுக்கி சேருங்கள். அதே போல ஒரு தக்காளியையும் துண்டுகளாக நறுக்கி சேருங்கள். இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.
– Advertisement –

ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கொஞ்சம் போல மல்லி தழையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து கொள்ளுங்கள். ஒரு டீஸ்பூன் அளவிற்கு மிளகை ஒன்றிரண்டாக இடித்து சேர்க்க வேண்டும். காரத்திற்கு பச்சை மிளகாய் எதுவும் சேர்க்கவில்லை எனவே மிளகை இடித்தால் போதுமானது. அவ்வளவுதான் இப்பொழுது எல்லாவற்றையும் தோசை மாவு பதத்திற்கு நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் தோசை கல்லை வைத்து சூடேற்றுங்கள். தோசை கல் சூடானதும் இரண்டு கரண்டி மாவை அள்ளி ஊற்றி லேசாக மென்மையாக பரப்பி விடுங்கள். இது ரொம்பவும் மெல்லியதாகவும் இல்லாமல், கல் தோசை போல கடினமானதாகவும் இல்லாமல் மீடியமாக பரப்பி விடுங்கள். பின் சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் விட்டு இரண்டு புறமும் பொன்னிறமாக சிவக்க சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:மாசி முதல் நாள் குபேர வழிபாடு
அவ்வளவுதாங்க, ரொம்பவே ஹெல்தியான இந்த கோதுமை அடை தோசை சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். இதனுடன் தொட்டுக் கொள்ள காரசாரமான கார சட்னியும், வெள்ளையான தேங்காய் சட்னியும் இருந்தால் அட்டகாசமாக இருக்கும். நீங்களும் இட்லி, தோசை செய்து போர் அடித்து இருந்தால் கொஞ்சம் கோதுமையை வைத்து இப்படி அடை தோசை சுட்டுப் பாருங்கள், அடிக்கடி விரும்பி சாப்பிட ஆரம்பித்து விடுவீங்க!

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top