
வளரும் இளைய தலைமுறையினர் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்கும் அவர்களுக்கு தேவைப்படக்கூடிய சத்துக்கள் அனைத்தையும் பெறுவதற்கும் கடைகளில் விற்கக் கூடிய பொருட்களை பயன்படுத்தி ஹெல்த் ட்ரிங்க் தயார் செய்வதைவிட எளிமையான முறையில் கோதுமை ரவையை வைத்து ஹெல்த் ட்ரிங்க்கை செய்து தர முடியும். இது வெயிலுக்கு இதமானதாக இருப்பதோடு ஆரோக்கியமாகவும் இருக்கும். அதே சமயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகவும் இருக்கும் அப்படிப்பட்ட ஒரு ஹெல்த் ட்ரிங்க்கை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.தேவையான பொருட்கள்கோதுமை ரவை – ஒரு கப்காய்ச்சாத பசும்பால் – அரை லிட்டர்காய்ச்சிய பால் – 3/4 கப்நாட்டு சக்கரை – 3 டேபிள் ஸ்பூன்ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்பீட்ரூட் – 3 துண்டுகள்சப்ஜா விதை பாதாம் பிசின் பாதாம், பிஸ்தா போன்றவை – விருப்பத்திற்கு ஏற்ப – Advertisement -செய்முறைமுதலில் கோதுமை ரவையை எடுத்து தண்ணீர் ஊற்றி இரண்டு முறை நன்றாக கழுவி கீழே ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு சாதாரண தண்ணீரை ஊற்றி மூடி போட்டு அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். கோதுமை ரவை சீக்கிரமாக ஊற வேண்டும் என்று நினைப்பவர்கள் சுடுதண்ணீரை ஊற்றி ஊற வைத்துக் கொள்ளலாம். அரைமணி நேரம் கழித்து கோதுமை ரவையில் இருக்கக்கூடிய தண்ணீரை முற்றிலுமாக வடிகட்டி வெறும் கோதுமை ரவையை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.எடுத்த இந்த கோதுமை ரவையை மிக்ஸி ஜாரில் போட்டு அதில் இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நைஸ் ஆக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதிலிருந்து பாலை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது கோதுமை ரவை பால் தயாராகிவிட்டது. இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அந்த பாத்திரத்தில் காய்ச்சாத அரை லிட்டர் பாலை ஊற்ற வேண்டும். இது கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது நாம் எடுத்து வைத்திருந்த கோதுமை ரவை பாலையும் அதில் ஊற்றி கைவிடாமல் நன்றாக கிளற வேண்டும். இது நன்றாக வெந்து கெட்டி பதத்திற்கு வரவேண்டும். – Advertisement – அவ்வாறு வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி அதை ஆற வைத்துக் கொள்ளுங்கள். ஆரிய இந்த விழுதை திரும்பவும் மிக்ஸி ஜாரில் போட்டு இதனுடன் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் தூளை சேர்க்க வேண்டும். பிறகு இதில் வேகவைத்த பீட்ரூட்டின் மூன்று துண்டுகளை மட்டும் சேர்த்து கால் கப் அளவிற்கு காய்ச்சிய பாலை ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.இவை அனைத்தும் நன்றாக அரைபட்ட பிறகு திரும்பவும் ஒரு அரை கப் அளவிற்கு பாலை ஊற்றி நன்றாக அரைத்தால் சுவையான கோதுமை ரவை ஹெல்த் ட்ரிங்க் தயாராகி இருக்கும். இதை கிளாஸில் ஊற்றிவிட்டு இதில் விருப்பத்திற்கேற்ப சப்ஜா விதைகள், பாதாம் பிசின், பிஸ்தா, முந்திரி, பாதாம், குங்குமப்பூ போன்ற எதை வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். சில்லென்று குடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஐஸ் க்யூபையும் அதில் சேர்த்துக் கொள்ளலாம்.இதையும் படிக்கலாமே: சோயா சிக்கன் மசாலா செய்முறைகோதுமையில் இருப்பதைப் போலவே கோதுமை ரவையிலும் அதிகளவு சத்துக்கள் இருக்கின்றன. கோதுமை ரவையை பலரும் கஞ்சியாகவும் உப்புமாவாகவும் தான் செய்து சாப்பிடுவார்கள். அதற்கு மாறாக வித்தியாசமான அதேசமயம் அருமையான சுவையில் கோதுமை ரவை ஹெல்த் ட்ரிங்க்கையும் செய்யலாம். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam