
– Advertisement –
நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்றதாக திகழக்கூடியதுதான் சக்கப் பிரதமை. இது ஓணம் பண்டிகைக்கு அனைவரும் செய்யக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. மேலும் கேரளாவில் எந்த ஒரு விசேஷமான நாட்கள் வந்தாலும் அந்த நாட்களில் நாம் எப்படி வீட்டில் பாயாசம் செய்கிறோமோ அதே போல் சக்கப் பிரதமை செய்வார்கள். திருமண நிகழ்வுகளில் கூட இந்த சக்க பிரதமை என்பது கண்டிப்பான முறையில் இடம்பெறும். அப்படிப்பட்ட கேரளாவின் சிறப்பு மிகுந்த சக்கப்பிரதமையை நாமும் நம் வீட்டில் எளிமையான முறையில் செய்யலாம். அதை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
பலாப்பழம் – 250 கிராம்வெல்லம் – 250 கிராம்தேங்காய் பால் – 400 எம்எல்நெய் – 150 எம்எல்உப்பு – ஒரு சிட்டிகைஏலக்காய் தூள் 1/2 ஸ்பூன்சீரகத்தூள் 1/4 ஸ்பூன்சுக்குத்தூள் – 1/2 ஸ்பூன்தேங்காய் நறுக்கியது – ஒரு கைப்பிடி அளவுதிராட்சை – ஒரு கைப்பிடி அளவுமுந்திரி – ஒரு கைப்பிடி அளவு
– Advertisement –
செய்முறை
முதலில் பலாப்பழத்தை சுத்தம் செய்து அதன் கொட்டைகளை நீக்கிக் கொள்ளுங்கள். அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக தேங்காயை நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் அடிகனமான ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த பாத்திரம் சூடானதும் அதில் 150 எம்எல் தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். தண்ணீர் சூடானதும் நாம் அரைத்து வைத்திருக்கும் பலாப்பழத்தையும் அதில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது நாம் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலில் இருந்து 100 எம்எல் மட்டும் இதனுடன் சேர்த்து மறுபடியும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனுடன் 50 எம்எல் நெய்யையும் சேர்த்து கலக்க வேண்டும். பலாப்பழத்தின் பச்சை வாடை போகும் வரை அதை நன்றாக வேக விடுங்கள்.
– Advertisement –
பச்சை வாடை நீங்குவதற்கு குறைந்தது இரண்டிலிருந்து மூன்று நிமிடம் ஆகும். பச்சை வாடை நீங்கிய பிறகு இதில் பொடித்து வைத்திருக்கும் வெல்லத்தை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். வெல்லம் நன்றாக உருகி பலாப்பழத்துடன் சேர்ந்து திக்காக மாறும் வரை அடுப்பிலேயே வைத்திருக்க வேண்டும். பிறகு இதில் உப்பு, ஏலக்காய் தூள், சீரகத்தூள், சுக்குத்தூள் இவை அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சீரகத்தூள் கால் ஸ்பூனை விட சற்று குறைவாக சேர்த்துக் கொண்டால் போதும் இவை அனைத்தையும் நன்றாக கலந்து விட்டு மறுபடியும் வேக விடுங்கள். இப்பொழுது மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 50 எம்எல் நெய்யை ஊற்றி நெய் உருகியதும் அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தேங்காயை ஒரு கைப்பிடி அளவு போட்டுக் கொள்ளுங்கள். தேங்காய் லேசாக சிவக்க ஆரம்பித்ததும் முந்திரியையும் போட்டு நன்றாக வதக்குங்கள். முந்திரியும் லேசாக சிவக்க ஆரம்பித்ததும் திராட்சையும் போட்டு இவை அனைத்தும் பொன்னிறமாகும் வரை அடுப்பில் வைத்திருந்து அதை அப்படியே கொண்டு வந்து வெந்து கொண்டிருக்கும் பலாப்பழ விழுதில் ஊற்றி விட வேண்டும்.
அந்த நெய் முழுவதும் பலாப்பழ விழுதில் நன்றாக கலந்து வரும் படி கலந்து விட்டுக் கொள்ள வேண்டும். இரண்டிலிருந்து மூன்று நிமிடம் அடுப்பிலேயே வைத்திருந்து பிறகு மீதம் இருக்கக்கூடிய தேங்காய் பாலை அதில் ஊற்றி நன்றாக ஒரு முறை கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விட வேண்டும். அடுப்பில் இருந்து இறக்கிய பிறகு கடைசியாக நாம் மீதம் வைத்திருக்கும் நெய்யையும் அதில் ஊற்றி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான சக்கப் பிரதமை தயாராகி விட்டது.
இதையும் படிக்கலாமே:பாக்கெட் பாலில் வெண்ணை, நெய்கேரளா ஸ்பெஷலாக கருதக்கூடிய இந்த சக்கப்பிரதமையை நாமும் நம் வீட்டில் விசேஷமான நாட்களில் செய்து தருவதன் மூலம் அனைவரும் மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார்கள். பலாப்பழமே பிடிக்காது என்பவர்கள் கூட இந்த சக்க பிரதமையை விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam