– Advertisement –
சிறுதானியங்களை நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிமிணர்கள் கூறுகிறார்கள். சிறு தானியத்தில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்திருக்கிறது என்பதால் அது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. மிகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதுதான் பல குடும்பத் தலைவிகளின் எதிர்பார்ப்பது.
அந்த வகையில் இரும்பு சத்து மிகுந்த கேழ்வரகு அதாவது ராகியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள், ராகியை வைத்து கழி கிண்டுவது, ராகி புட்டு செய்வது, ராகி தோசை செய்வது, ராகி இட்லி செய்வது என்று பல விதங்கள் இருந்தாலும் அதை செய்வதில் குடும்பத் தலைவிகளுக்கு சிறிது சிரமம் என்பது இருக்கத்தான் செய்யும். அந்த சிரமத்தை தவிர்த்து விட்டு ராகியை வைத்து எளிமையான முறையில் ஊத்தாப்பம் செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
ராகி மாவு – ஒரு கப்,பாசிப்பருப்பு – ஒரு கப்,உப்பு – தேவையான அளவு,வெங்காயம் – ஒன்று,தக்காளி – ஒன்று,மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்,கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
செய்முறை
முதலில் பாசிப்பருப்பை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி சுத்தமான தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். இது குறைந்தது மூன்றில் இருந்து 4 மணி நேரம் ஊற வேண்டும். ஊறிய இந்த பாசிப்பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி நைஸ் ஆக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பாசிப்பருப்பு மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். அந்த மிக்ஸி ஜாரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கழுவி இந்த பருப்புடன் ஊற்றிக் கொள்ளுங்கள்.
– Advertisement –
இப்பொழுது ராகி மாவை இந்த பாசிப்பருப்பு மாவுடன் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். தோசை மாவு பதத்திற்கு இந்த மாவு இருக்க வேண்டும். இதில் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். கலந்த இந்த மாவை மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். ஒரு வேளை உடனே ஊத்தாப்பம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இதனுடன் சோடா உப்பை சேர்த்து சிறிது நேரம் வைத்திருந்து பிறகு ஊற்றலாம்.
அடுத்ததாக ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் தோசை கல்லை வைத்து கல் சூடானதும் ராகி மாவை எடுத்து ஊத்தாப்பம் அளவிற்கு சற்று கனமாக ஊற்ற வேண்டும்.
– Advertisement –
பிறகு இதன் மேல் நாம் தயார் செய்து வைத்திருக்கும் வெங்காயத்தை வைத்து சுற்றி எண்ணெய் ஊற்றி மூடி போட்டு வேக விடுங்கள். நன்றாக வெந்த பிறகு இதை அப்படியே திருப்பி போட்டு மறுபடியும் லேசாக எண்ணெய் ஊற்றி ஒரு நிமிடம் அடுப்பில் வைத்திருங்கள். அவ்வளவுதான் சுவையான ராகி ஊத்தப்பம் தயாராகிவிட்டது. இதற்கு தொட்டுக் கொள்வதற்கு தனியாக எதுவும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
இதே ராகி மாவை நாம் தோசையாகவும் ஊற்றித் தரலாம். ஊற்றுவதற்கு மிகவும் எளிமையாகவும் இருக்கும். சுவையும் நன்றாக இருக்கும். எந்த அளவிற்கு தோசையை நம்மால் மெல்லிசாக ஊற்ற முடியுமா அந்த அளவிற்கு இந்த தோசையையும் மெல்லிசாக ஊற்றி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோஸ்ட் ஆக தயார் செய்து கொடுக்க முடியும்.
இதையும் படிக்கலாமே:மாதக்கணக்கில் கெட்டுப் போகாத இஞ்சி தொக்கு செய்முறை
சிறுதானியங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் இருக்கிறது. ராகி மாவில் அதிக அளவு இரும்பு சத்தும் நார்ச்சத்தும் இருக்கிறது என்பதால் இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய சிறு குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என்று அனைவருமே ராகியை தங்களுடைய உணவில் ஏதாவது ஒரு ரூபத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி வித்தியாசமாக ராகி ஊத்தாப்பத்தை செய்து கொடுத்துப் பாருங்கள். அனைவரும் வேண்டாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam