
– Advertisement –
பொதுவாக தக்காளி சட்னிக்கு மிளகாய் அல்லது மிளகாய் பொடி சேர்ப்பது தான் வழக்கம் ஆனால் இட்லி, தோசை, ஊத்தாப்பம், சப்பாத்திக்கு தொட்டுக்க அருமையான சுவையுடன் கூடிய இந்த தக்காளி சட்னி செய்வதற்கு சாம்பார் பொடி இருந்தால் போதும். வித்தியாசமான சுவையில் அட்டகாசமான நிறத்தில் தளதள தக்காளி சட்னி எப்படி நாமும் தயார் செய்யப் போகிறோம்? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள் :
தக்காளி – 3சாம்பார் பொடி – இரண்டு ஸ்பூன்உப்பு – தேவையான அளவுநல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்கடுகு – அரை ஸ்பூன்உளுந்து – அரை ஸ்பூன்சீரகம் – அரை ஸ்பூன்கருவேப்பிலை – ஒரு கொத்துவரமிளகாய் – இரண்டுபச்சை மிளகாய் – ஒன்றுதுருவிய இஞ்சி – அரை ஸ்பூன்பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகைமஞ்சள் தூள் – ஒரு சிட்டிகைகொத்தமல்லி – சிறிதளவு
– Advertisement –
தக்காளி சட்னி செய்முறை விளக்கம் :
இந்த தக்காளி சட்னி செய்வதற்கு தேவையான பொருட்களை முதலில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நன்கு பழுத்த பெரிய மூன்று தக்காளி பழங்களை பார்த்து தேர்ந்தெடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதனை ஒன்றிரண்டாக நறுக்கி ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ரெண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சாம்பார் தூள், தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் நைசாக அரைக்க வேண்டிய அவசியமில்லை.
பின்னர் இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடி கனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும், கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்ததும், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளித்து, பின்னர் காரத்திற்கு வர மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை இரண்டாக உடைத்து சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள்.
– Advertisement –
பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலை, துருவிய இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்து ஒரு முறை நன்கு வதக்குங்கள். இவை நன்கு வதங்கிய பின்பு பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். வாசம் வர வதங்கியதும் இப்போது நீங்கள் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை இதனுடன் சேர்க்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:6-4-2025 நாளை சொல்ல வேண்டிய ராமநவமி மந்திரம்
ஜாரை கழுவிய தண்ணீருடன் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து பின்னர் உப்பு, காரம் எல்லாம் சரி பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது சட்னியை நன்கு கொதிக்க விடுங்கள். கொதித்து எண்ணெய் பிரிய கெட்டியானதும், நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான், அருமையான சுவையுடன் கூடிய இந்த தக்காளி சட்னி, சாம்பார் பொடியில் நொடியில் தயார்! இட்லி, தோசைக்கு தொட்டுக்க அவ்வளவு ருசியாக இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க!
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam