– Advertisement –
சிகப்பு அவல் உடலுக்கு பல வகையான நன்மைகளை செய்யக் கூடியது. இதில் இருக்கும் ஏராளமான சத்துக்கள், உடலை திடகாத்திரமாக வலுவாக்குகிறது. உடல் பலகீனமானவர்கள் அடிக்கடி சிகப்பு அவலை ஏதாவது ஒரு முறையில் உணவில் சேர்த்து வருவது நன்மை தரும். ரத்த சோகைக்கு மருந்தாக அமையும். குடல் புண்ணை ஆற்றும். நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. புற்றுநோயை கூட தடுக்கும், குண நலன்களை கொண்டுள்ளது. பாரம்பரியமாக இந்த சிகப்பு அவலை சாப்பிட்டு வருபவர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் அமிலங்களை உடலில் செல்லாமல் தடுக்கும். இவ்வளவு அளப்பரிய நன்மைகளைக் கொண்டுள்ள சிகப்பு அவல் கொண்டு சுவையான லட்டு எளிதாக தயாரிப்பது எப்படி? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்க இருக்கிறோம்.
சிகப்பு அவல் லட்டு செய்ய தேவையான பொருட்கள் :
– Advertisement –
சிகப்பு அவல் – ஒரு கப்
தேங்காய் துருவல் – அரை கப்
நெய் – 3 ஸ்பூன்
முந்திரி, பாதாம், திராட்சை போன்ற நட்ஸ் வகைகள் – அரை கப்
பொடித்த வெல்லம் – அரை கப்
ஏலக்காய் – இரண்டு
சிகப்பு அவல் லட்டு செய்முறை விளக்கம் :
இந்த லட்டு செய்வதற்கு முதலில் வாங்கிய சிகப்பு அவலை புடைத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். சிகப்பு அவலில் உமி இருக்கும். பின்னர் ஒரு பேனில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு அவல் சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். நன்கு வாசம் வர வறுத்ததும் அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். பின்னர் அதே பேனில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு உங்களிடம் இருக்கக் கூடிய நட்ஸ் வகைகளை அரை கப் அளவிற்கு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.
முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர்திராட்சை, பூசணி விதைகள், வால்நட்ஸ் எது உங்களிடம் இருக்கிறதோ அதை பொடிப்பொடியாக சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் அதே நெய்யில் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஆற வைத்துள்ள அவலை மிக்சர் ஜாரில் சேர்த்து அதனுடன் ரெண்டு ஏலக்காயை சேர்த்து, பொடித்து தூள் செய்துள்ள வெல்லத்தையும் சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
இதையும் படிக்கலாமே:மார்கழி மாதம் சொல்ல வேண்டிய காமாட்சி அம்மன் மந்திரம்
அரைத்து எடுத்த இந்த தூளுடன் வறுத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் நட்ஸ் வகைகளையும் சேர்த்து மீதம் இருக்கும் ஒரு ஸ்பூன் நெய்யை விட்டு நன்கு ஈரப்பதம் வர பிரட்டி கைகளால் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வையுங்கள். அவ்வளவுதான், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த ஆரோக்கியம் நிறைந்த லட்டுவை உண்டு மகிழலாம். ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். வெளியில் வைத்திருந்தால் இரண்டில் இருந்து மூன்று நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம். சிகப்பு அவலில் வைட்டமின் பி, நார்ச்சத்து, மெக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம், மாங்கனீஸ், ஜிங்க், புரதம் போன்ற எண்ணற்ற சத்துகள் உள்ளன. ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பலமாக்குவதால் அடிக்கடி உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இது போல செய்து கொடுத்து அசத்துங்கள்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam