
– Advertisement –
பக்தர்களின் மனம் நிறைந்த இந்த மகா சிவராத்திரி நல்ல நாளில் பாரம்பரியமான முறையில் கர்நாடகாவில் தம்பிட்டு தயார் செய்து ஈசனுக்கு படைத்து வழிபடுவார்கள். சுவையான இந்த தம்பிட்டு ரெசிபி சிவபெருமானுக்கு ரொம்பவும் பிடித்தமான நைவேத்திய பொருளாகும். இதை எப்படி பாரம்பரியமான முறையில் நாமும் தயார் செய்து நைவேத்தியம் படைப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
தம்பிட்டு ரெசிபி செய்ய தேவையான பொருட்கள் :
பச்சரிசி – ஒன்றரை கப்பொட்டுக்கடலை – அரை கப்வேர்க்கடலை – அரை கப்ஏலக்காய் – மூன்றுவெள்ளை எள் – கால் கப்தேங்காய் துண்டுகள் – ஒரு கப்வெல்லம் – 200 கிராம்தண்ணீர் – ஒரு கப்
– Advertisement –
தம்பிட்டு ரெசிபி செய்முறை விளக்கம் :
சிவராத்திரி ஸ்பெஷல் தம்பிட்டு ரெசிபி செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றரை கப் அளவிற்கு பச்சரிசியை எடுத்து அதை வாணலியில் போட்டு பொன்னிறமாக மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சூடு ஆறிய பின்பு ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின் இதனுடன் அரை கப் அளவிற்கு பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ளுங்கள். அரை கப் அளவிற்கு வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் தெய்வீக மனம் வீச மூன்று ஏலக்காய்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் மிக்ஸியை இயக்கி நைசாக பவுடர் போல அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். இந்த கலவையை ஒரு அகன்ற பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
பின் வாணலியில் கால் கப் அளவிற்கு வெள்ளை எள்ளை லேசாக வறுத்து அந்த கலவையுடன் சேர்த்து கலந்து விடுங்கள். ஒரு கப் அளவிற்கு தேங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, இதனுடன் சேர்த்து கலந்து விடுங்கள். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 200 கிராம் அளவிற்கு வெல்லத்தை சேர்த்து, ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும். வெல்லம் கரைந்து இரண்டு நிமிடம் நன்கு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.
இப்போது இந்த வெல்ல பாகை வடிகட்டி அந்த கலவையுடன் சேர்த்து நன்கு பாகின் சூட்டோடு கலந்து விடுங்கள். அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து மாவு பதத்திற்கு வர வேண்டும். கை பொறுக்கும் சூடு வந்ததும், சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான கர்நாடகா ஸ்டைல் சிவராத்திரி ஸ்பெஷல் தம்பிட்டு ரெடி!
இதையும் படிக்கலாமே:12 ராசிக்காரர்களும் சிவராத்திரி அன்று செய்ய வேண்டிய தானம்
பாரம்பரியமான இந்த தம்பிட்டு ரெசிபி நம் தமிழ்நாட்டில் மாவிளக்கு தயார் செய்வது போல, தயார் செய்வார்கள். சிவபெருமானுக்கு ரொம்பவும் பிடித்த இந்த தம்பிட்டு மாவை விளக்கு போல தயார் செய்து அதில் திரி போட்டு நெய் ஊற்றி தீபம் ஏற்றுவார்கள், அதை தம்பிட்டு தீபம் என்றும் கூறுவார்கள். உருண்டைகளாக பிடித்து ஈசனுக்கு ஏற்றும் விளக்கை சுற்றிலும் வைத்து நைவேத்தியமாக படைத்தும் பிரார்த்தித்துக் கொள்வார்கள். சிவராத்திரி மட்டுமல்லாமல் சிவ பார்வதிக்கு உரிய எல்லா விரத நாட்களிலும் இதனை தயார் செய்து படைத்து வழிபட்டால் ஈசன் மனம் மகிழ்ந்து உடனே அருள் தருவார் என்பது நம்பிக்கை.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam