சுடச்சுட சுவையான இன்ஸ்டண்ட் அடை தோசை

சுடச்சுட சுவையான இன்ஸ்டண்ட் அடை தோசை

Qries

– Advertisement –

ஒரே மாதிரியான தோசையை சுட்டு போர் அடித்துப் போனவர்களுக்கு, இந்த அடை தோசை வித்தியாசமான சுவையுடன் உங்களுக்கு ரொம்பவும் பிடித்தமானதாக மாறப் போகிறது. எல்லா விதமான சட்னி, சாம்பாருடன் பொருந்தக் கூடிய இந்த தோசையை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். கேரட், பீட்ரூட் எல்லாம் சேர்த்து சுடச்சுட சூப்பரான முறையில் எப்படி இந்த அடை தோசையை ஈசியாக செய்வது? என்பதைத்தான் தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவு மூலம் பார்க்க இருக்கிறோம்.
அடை தோசை செய்ய தேவையான பொருட்கள்:
ரவை – ஒரு கப்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சீரகம் – ஒரு ஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – ஒன்று
துருவிய கேரட் – அரை கப்
துருவிய பீட்ரூட் – அரை கப்
கருவேப்பிலை – ஒரு கொத்து
நறுக்கிய மல்லித்தழை – அரை கைப்பிடி
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
அடை தோசை செய்முறை விளக்கம்:
அடை தோசை செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பவுலில் ஒரு கப் அளவிற்கு ரவை சேர்த்துக் கொள்ளுங்கள். ரவையுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு சேர்த்து, ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கெட்டியான தயிரையும் சேர்த்து கலந்து விடுங்கள். தேவையான அளவிற்கு உப்பு போட்டு, தண்ணீர் விட்டு கெட்டியாக கலந்து வைத்து ஊற விடுங்கள். ஒரு 10 நிமிடம் ஊறியதும் இன்னும் நன்கு இறுகிவிடும்.
– Advertisement –

அதன் பிறகு பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு பச்சை மிளகாயை சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி போட்டுக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி போட்டுக் கொள்ளுங்கள். ஒரு டீஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டுக் கொள்ளுங்கள். நறுக்கிய மல்லி தழை அரை கைப்பிடி அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் துருவிய கேரட் மற்றும் பீட்ரூட் ஆகியவற்றை தலா அரை கைப்பிடி அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொஞ்சம் போல தண்ணீர் விட்டு கெட்டியாக அடை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தோசை தேய்ப்பதற்கு தகுந்தார் போல தண்ணீர் விடுங்கள், அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
– Advertisement –

இதையும் படிக்கலாமே:11-10-2024 துர்காஷ்டமி வழிபாடு
ஒரு ஐந்து நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பிறகு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி அடை தோசை போல தடிமனாக ஊற்றி பரப்புங்கள். மேலே நல்லெண்ணெய் அல்லது நெய் ஏதாவது ஒன்றை சேர்த்து சுடச்சுட இருபுறமும் நன்கு வெந்த பின்பு சுட்டு எடுத்து சூடான சாம்பார் அல்லது காரச் சட்னி அல்லது கெட்டியான தேங்காய் சட்னியுடன் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். ரொம்பவே சூப்பரான முறையில் ஆரோக்கியம் நிறைந்த இந்த அடை தோசையை அமலாபுரம் அடை தோசை என்று கூறுவது உண்டு. நீங்களும் உங்க வீட்டில் இதை ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கும் நிச்சயம் பிடித்து போய்விடும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top