சுவையான சைவ கோலா உருண்டை செய்முறை

சுவையான சைவ கோலா உருண்டை செய்முறை

Qries

– Advertisement –

கார்த்திகை மாதம் தொடங்கி விட்டாலே பலரது இல்லங்களிலும் மாலை அணிந்து விரதம் இருக்க ஆரம்பிப்பார்கள். சபரிமலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி, மேல்மருவத்தூருக்கு செல்பவர்கள் ஆக இருந்தாலும் சரி அல்லது தைப்பூசத்திற்காக பழனிக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி பலரும் கார்த்திகை மாதம் தொடங்கியதுமே வீட்டை சுத்தம் செய்து அசைவம் சாப்பிடாமல் விரதம் இருக்க ஆரம்பிப்பார்கள். அப்படி அசைவம் சாப்பிடாமல் விரதம் இருக்கும் நேரத்தில் பலரும் வெளியில் உணவு அருந்தாமல் வீட்டிலேயே சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் பொழுது அவர்களுக்கு சுவையாக செய்து தர வேண்டும் என்ற எண்ணம் வீட்டில் இருக்கும் பெண்மணிகளுக்கு அதிகமாகவே இருக்கும்.
மாலை நேரத்தில் சிற்றுண்டியாக செய்து தருவதற்கு எப்பொழுதும் போல் வடை, பச்சி, போண்டா என்று செய்யாமல் இந்த முறையில் மீல்மேக்கரை வைத்து சைவ கோலா உருண்டையை செய்து கொடுக்கும் பொழுது வீட்டில் இருக்கக்கூடிய அனைவருமே சாப்பிட்டு மகிழ்வார்கள். மேலும் மீல் மேக்கரில் அதிக அளவு புரதச்சத்து இருக்கிறது என்பதால் இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அந்த சைவ கோலா உருண்டையை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
– Advertisement –

தேவையான பொருட்கள்
மீல் மேக்கர் – 1 1/2 கப்பச்சை மிளகாய் – 3இஞ்சி – 1 இஞ்ச் அளவுபூண்டு – 5 பல்சோம்பு – 2 டீஸ்பூன்வெங்காயம் – 1மஞ்சள் தூள் – 2 சிட்டிகைமிளகாய் தூள் – 1 டீஸ்பூன்தனியாத்தூள் -1/2 டீஸ்பூன்கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்பொட்டுக்கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகைகருவேப்பிலை, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவுஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் பொறிப்பதற்கு – தேவையான அளவு.
செய்முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தண்ணீரை கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்ததும் அதில் நாம் எடுத்து வைத்திருக்கக்கூடிய மீல்மேக்கரை போட்டு இரண்டு நிமிடம் நன்றாக கொதிக்க விடுங்கள். மீல்மேக்கர் அனைத்தும் பெரியதாகிவிடும். பிறகு இதை ஒரு வடிகட்டியில் கொட்டி தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள். தண்ணீர் அனைத்தும் வடிந்த பிறகு கைகளால் அதை நன்றாக அழுத்தி பிழிந்து மீதம் இருக்கக்கூடிய தண்ணீரையும் எடுத்து விடுங்கள். பிறகு இதை அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டுக்கொள்ள வேண்டும்.
– Advertisement –

இதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு போன்றவற்றையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலாத்தூள், பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி, உப்பு தேவையான அளவு இவை அனைத்தையும் போட்டு நன்றாக பிணைந்து கொள்ளுங்கள்.
இரண்டு நிமிடம் இது அப்படியே இருக்கட்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் லேசாக சூடானதும் அதிலிருந்து ஒரு கரண்டி எண்ணெய் மட்டும் எடுத்து நாம் பிணைந்து வைத்திருக்கும் மாவில் ஊற்றி நன்றாக ஒரு முறை மறுபடியும் பிணைந்து கொள்ளுங்கள்.
– Advertisement –

எண்ணெய் நன்றாக சூடானதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து இந்த மாவை சிறு சிறு உருண்டை போல உருட்டி அந்த எண்ணெயில் சேர்க்க வேண்டும். இந்த உருண்டையை எண்ணெயில் போட்டதும் உடனே கரண்டியை விட்டு கலந்து விடக்கூடாது. உருண்டை உடைவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும். இரண்டு நிமிடம் கழித்த பிறகு நன்றாக பிரட்டி விட்டு பொன்னிறமாகும் வரை அடுப்பிலேயே வைத்திருந்து பிறகு எடுக்க வேண்டும். சுவையான சைவ கோலா உருண்டை தயாராகிவிட்டது .
இதையும் படிக்கலாமே:நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு இஞ்சி குழம்பு
மாலை நேரத்தில் இந்த முறையில் மீல்மேக்கரை வைத்து சைவ கோலா உருண்டை செய்து கொடுக்கும் பொழுது அதை செய்து முடிப்பதற்குள்ளாகவே தட்டுகள் அனைத்தும் காலியாகி விடும். கடைகளில் சென்று தேவையில்லாத பொருட்களை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டிலேயே இந்த முறையில் செய்து கொடுக்கலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top