– Advertisement –
டிபன் பாக்ஸ் ரெசிபிகளில் ரொம்பவும் வித்தியாசமான இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கவரும் வகையில் அமையப் போகிறது. காளான் வைத்து விதவிதமான ரெசிபிகள் செய்வது உண்டு. அதில் இந்த முறையில் ஒருமுறை மஸ்ரூம் ரைஸ் செய்து பாருங்கள், எல்லோருமே விரும்பி சாப்பிடுவாங்க! அனைவரும் விரும்பும் சுவையான காளான் சாதம் எப்படி தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தொடர்ந்து காண இருக்கிறோம்.
மஸ்ரூம் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள் :
மஸ்ரூம் – ஒரு கப்சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்றுசோம்பு – கால் ஸ்பூன்பச்சை மிளகாய் – ஒன்றுபெரிய வெங்காயம் – ஒன்றுஇஞ்சி பூண்டு விழுது – 1/4 ஸ்பூன்மஞ்சள் தூள் – 2 சிட்டிகைமிளகாய் தூள் – 1/4 ஸ்பூன்மல்லித்தூள் – 1/4 ஸ்பூன்கரம் மசாலா – சிறிதளவுஉப்பு – தேவையான அளவுமல்லித்தழை – சிறிதளவுகறிவேப்பிலை – ஒரு கொத்து
– Advertisement –
அரைக்க:சின்ன வெங்காயம் – 10பூண்டு பல் – மூன்றுவரமிளகாய் – நான்குதக்காளி – ஒன்று
மஸ்ரூம் ரைஸ் செய்முறை விளக்கம் :
இந்த காளான் ரெசிபி செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அரைக்க கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மூன்று பல் பூண்டு, நான்கு வர மிளகாய், ஒரு பெரிய தக்காளி, எட்டிலிருந்து 10 சின்ன வெங்காயத்தை தோலுரித்து மிக்ஸியில் சேர்த்து நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு ஆகிய மசாலா பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பச்சை மிளகாயை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி விடுங்கள். இதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
கால் ஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக நன்கு வதங்கியதும், மசாலா பொருட்களை சேர்க்க வேண்டும். மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை முறையே மேற்கூறிய அளவின்படி சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து விடுங்கள். மசாலா வாசம் போனதும் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பின் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள காளான்களை ஒன்றிரண்டாக வெட்டி அதனுள் சேர்த்து ஒருமுறை பிரட்டி விட்டு, மூடி போட்டு ரெண்டு நிமிடம் வேக விடுங்கள்.
இதையும் படிக்கலாமே:தாங்க முடியாத கஷ்டம் வரும்போது சொல்ல வேண்டிய மந்திரம்
கடைசியாக கொஞ்சம் போல கொத்தமல்லி தழை மற்றும் கருவேப்பிலை இலைகளை பொடியாக நறுக்கி சேர்த்து தூவுங்கள். நன்கு பிரட்டி விட்டதும், உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து கலந்து வைத்தால் சுவையான மஷ்ரூம் ரைஸ் வித்தியாசமான முறையில் டேஸ்ட்டியாக எல்லோரும் விரும்பும் வகையில் ரெடி! நீங்களும் இப்படி ஒரு முறை மஸ்ரூம் ரைஸ் செய்து பாருங்க, அடிக்கடி எல்லோரும் கேட்க ஆரம்பித்து விடுவாங்க.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam