சுவையான முட்டை கறி ரெசிபி | Suvaiyana muttai kari recipe

சுவையான முட்டை கறி ரெசிபி | Suvaiyana muttai kari recipe

Qries

– Advertisement –

சுட சுட சாதத்துடனும், சப்பாத்தியுடனும் தொட்டு சாப்பிட இந்த முட்டை கறி அட்டகாசமான நல்ல காம்பினேஷனாக இருக்கக்கூடும். எப்பொழுதும் ஒரே மாதிரியான சைடிஷ் கொடுத்து போர் அடித்து போனவர்களுக்கு, இந்த மாதிரி முட்டைக்கோசு, உருளைக்கிழங்கு, முட்டை சேர்த்து ஒரு முறை முட்டை கறி செய்து கொடுத்து பாருங்கள், இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்டு கேட்டு சாப்பிடுவார்கள், அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த முட்டை கறி எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவு மூலமாக தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.
முட்டை கறி செய்ய தேவையான பொருட்கள்:

– Advertisement –

முட்டை – 4
முட்டைக்கோஸ் – 200 கிராம்
உருளைக்கிழங்கு – 200 கிராம்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – இரண்டு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி தழை – சிறிதளவு
தனி மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

முட்டை கறி செய்முறை விளக்கம்:
முட்டை கறி செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 200 கிராம் முட்டைக்கோசை நன்கு நீளவாக்கில் மெல்லியதாக துருவி வைத்துக் கொள்ளுங்கள். 200 கிராம் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ளுங்கள். பின் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய விடுங்கள்.
– Advertisement –

எண்ணெய் காய்ந்து வந்ததும், கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் கடலை பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின் துருவிய முட்டைகோஸ் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு மசித்து வைத்த உருளைக் கிழங்கையும் சேர்த்து, காரத்திற்கு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். கலந்து விடும் பொழுது இடையே நெய் சேர்த்து கலந்து விடுங்கள்.
அனைத்தும் ஒன்றுடன் ஒன்றாக நன்கு கலந்த முட்டைக்கோசு வெந்து வர வேண்டும். முட்டைக்கோசு வேகுவதற்கு தேவைப்பட்டால் தண்ணீரை சிறிதளவு தெளித்துக் கொள்ளுங்கள். வெந்து வந்த முட்டைக்கோசுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி பிரட்டி விடுங்கள். மூடி போட்டு இடையிடையே விட்டு விட்டு பிரட்டி விடுங்கள். நன்கு உதிரி உதிரியாக முட்டை உதிர்ந்து வர வேண்டும்.
இதையும் படிக்கலாமே:தீபாவளியை எப்படி கொண்டாடுவது?
முட்டை உதிரியாக வந்தவுடன் நறுக்கிய மல்லித்தழை தூவி ஒரு முறை நன்கு பிரட்டி விட்டு இறக்கி சுடச்சுட சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம், சப்பாத்தி போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்கள், அட்டகாசமாக இருக்கும். ரொம்ப சூப்பரான சைடிஷ் ஆக இருக்கக் கூடிய இந்த ஒரு ரெசிபியை நீங்களும் இதே மாதிரி சுலபமான முறையில் இப்படி தயாரித்துக் கொடுத்து பாருங்கள், உங்களை வீட்டில் உள்ள எல்லோரும் கண்டிப்பாக பாராட்டி தள்ளி விடுவார்கள், அவ்வளவு ருசியாக இருக்கும். முட்டையுடன் சிலருக்கு காய்கறி சேர்ப்பது சுத்தமாக பிடிக்காது, ஆனால் இப்படி இந்த முறையில் செய்து பாருங்கள் நிச்சயம் விரும்பாதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top