– Advertisement –
நம்முடைய தமிழ்நாட்டில் சமையலுக்கு என்றே மிகவும் பிரபலமான ஊராக திகழ்வதுதான் செட்டிநாடு. செட்டிநாட்டின் கைப்பக்குவம் வேறு எங்கும் கிடைக்காது என்றே கூற வேண்டும். அப்படிப்பட்ட செட்டிநாட்டில் செய்யக்கூடிய ஒரு இனிப்பு பொருளாக திகழக்கூடியது தான் ரங்கூன் பொட்டு. இந்த ரங்கூன் புட்டுவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்
இனிப்பு பொருட்கள் என்றாலே அதை யாரும் ஒதுக்க மாட்டார்கள். அதுவும் இன்றைய காலத்தில் சர்க்கரை நோயாளிகள் கூட வெள்ளை இனிப்பை தவிர்த்து விட்டு நாட்டுச்சர்க்கரை, வெல்லம் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுகிறார்கள். இனிப்பே பிடிக்காது என்பவர்கள் கூட இந்த ரங்கோன் புட்டுவை ஒருமுறை சுவைத்து பார்த்தால் மீண்டும் வேண்டும் என்று கேட்டு வாங்கும் சாப்பிடும் அளவிற்கு சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். செய்வதும் மிகவும் எளிதாக இருக்கும்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
நெய் – 4 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் – ஒரு கப்
ரவை – ஒரு கப்
வெல்லம் – 1 1/2 கப்
தண்ணீர் – 4 கப்
முந்திரி, கிஸ்மிஸ் – தேவையான அளவு
ஏலக்காய் – 1/2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
முதலில் கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நெய்யை ஊற்ற வேண்டும். நெய் உருகியதும் முந்திரி கிஸ்முஸ் போட்டு நன்றாக சிவக்க வறுத்து அதை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
மீதம் இருக்கும் நெய்யில் துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் சிவந்த பிறகு அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நெய் ஊற்றி அதில் ரவையை சேர்த்து நன்றாக வறுத்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
இப்பொழுது கடாயை மறுபடியும் அடுப்பில் வைத்து வெல்லத்தை சேர்த்து நான்கு கப் அளவு தண்ணீரையும் ஊற்றி வெல்லம் நன்றாக கரைந்தவுடன் வறுத்து வைத்திருக்கும் ரவையை அதில் சேர்த்து வேக விட வேண்டும். ரவை நன்றாக வெந்த பிறகு வறுத்து வைத்திருக்கும் தேங்காய், ஏலக்காய் தூள் இரண்டையும் சேர்த்து நன்றாக வேகவிட வேண்டும்.
இவை அனைத்தும் நன்றாக வெந்து கெட்டியான பதம் வந்த பிறகு இரண்டு டேபிள் ஸ்பூன் நெய், வறுத்து வைத்திருக்கும் முந்திரி கிஸ்முஸ் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் மிகவும் பிரபலமான சுவை மிகுந்த ரங்கூன் புட்டு தயாராகி விட்டது.
இதையும் படிக்கலாமே: ஆரோக்கியமான சப்பாத்தி செய்முறை
கடைகளில் விற்கக்கூடிய இனிப்பு பண்டங்களை வாங்குவதற்கு பதிலாக இந்த முறையில் பாரம்பரியமான இனிப்புப் பொருட்களை நம் வீட்டிலேயே நாமே செய்து தருவதன் மூலம் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam