– Advertisement –
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் மதியத் உணவை தர வேண்டும். அப்படி இல்லை என்றால் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு செய்தாலும் அது திரும்ப வீட்டிற்க்கே வந்து அந்த உணவுப் பொருள் வீணாகிவிடும். அப்படி அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் செய்யக்கூடிய உணவுப் பொருட்கள் பல இருந்தாலும் சத்து மிகுந்த உணவுப் பொருட்களை தருவதுதான் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படி சத்து மிகுந்த ஒரு மதிய உணவாக கருதப்படக்கூடிய சென்னா புலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
கொண்டைக்கடலையில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இதை நாம் சுண்டலாக செய்து கொடுத்தால் சாப்பிடும் அளவைவிட இப்படி மதிய உணவுடன் சேர்த்துக் கொடுக்கும் பொழுது அதை குழந்தைகள் விரும்பி எந்தவித தடையும் சொல்லாமல் சாப்பிடுவார்கள்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை – 250 கிராம்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – 2 டீஸ்பூன்
பிரியாணி இலை – 3
கிராம்பு – 4
பாஸ்மதி அரிசி – 300 கிராம்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 3
பட்டை – 2
சீரகம் – ஒரு டீஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – 2,
பச்சை மிளகாய் – 5,
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
தக்காளி – 4
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித்தூள் – ஒரு டீஸ்பூன்
சென்னா மசாலா – 2 டீஸ்பூன்
புதினா மற்றும் கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
தண்ணீர் – 2 கப்
செய்முறை
முதலில் கொண்டைக்கடலையை தண்ணீர் ஊற்றி கழுவி எட்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு குக்கரை எடுத்து அதில் ஊற வைத்திருக்கும் கொண்டை கடலையை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் உப்பு, ஒரு பிரியாணியிலை, கிராம்பு இவற்றை சேர்த்து கொண்டைக்கடலை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் நான்கு விசில் வரும் வரை விட்டு விடுங்கள்.
நான்கு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். இப்பொழுது பாஸ்மதி அரிசியை எடுத்து சுத்தம் செய்து அதில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து இரண்டும் நன்றாக காய்ந்ததும் அதில் பிரியாணியிலை, ஏலக்காய், பட்டை, சீரகம், சோம்பு இவற்றை சேர்க்க வேண்டும்.
– Advertisement –
இவை அனைத்தும் நன்றாக சிவந்த பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்க்க வேண்டும். பிறகு நீளவாக்கில் கீரிய பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய தக்காளி இரண்டையும் சேர்த்து நன்றாக தக்காளி மசிய வேகம் வரை வதக்க வேண்டும்.
பிறகு இதில் உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், சென்னா மசாலா இவை அனைத்தையும் சேர்த்து மசாலாவின் பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும். அடுத்ததாக புதினா, கொத்தமல்லி இலையை அதில் போட்டு வேக வைத்திருக்கும் கொண்டைக்கடலையை தண்ணீருடன் ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும்.
– Advertisement –
இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது ஊற வைத்திருக்கும் அரிசி, தண்ணீர் இவற்றை ஊற்றி ஒருமுறை நன்றாக கலந்து விட்டு மூடி போட்டு குறைந்த தீயில் 15 நிமிடம் வேக விட வேண்டும். 15 நிமிடம் கழித்து மூடியை திறந்து பார்த்தால் அருமையான சென்னாபுலாவ் தயாராக இருக்கும்.
இதையும் படிக்கலாமே: ஸ்ரீலங்கா ஸ்பெஷல் தொதல் செய்முறை
குழம்பு தனியாக, காய்கறி தனியாக என்று செய்து கொடுப்பதை விட இப்படி உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களை வைத்து புலாவ் செய்து கொடுத்தால் பிரியாணி சுவையில் இருக்கிறது என்பதற்காகவே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam