சோயா கறி ரெசிபி | Soya curry gravy

சோயா கறி ரெசிபி | Soya curry gravy



அசைவ சுவையில் இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கு தொட்டுக்க மீல்மேக்கர் எனப்படும் சோயா சங்ஸ் கொண்டு அருமையான சுவையில் அட்டகாசமான சோயா கறி கிரேவி எப்படி குக்கரில் ரொம்ப சுலபமாக நாமும் தயாரித்து பார்த்து சுவைக்க இருக்கிறோம்? என்னும் சமையல் குறிப்பு சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்ள போகிறோம்.சோயா கறி கிரேவி செய்ய தேவையான பொருட்கள் :மீல்மேக்கர் – இரண்டு கப்சமையல் எண்ணெய் – நான்கு டேபிள் ஸ்பூன்பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை – தலா ஒன்றுபெரிய வெங்காயம் – ஒன்றுகருவேப்பிலை – ஒரு கொத்துதக்காளி – ஒன்றுஇஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுகரம் மசாலா – ஒரு ஸ்பூன்சீரகத்தூள் – அரை ஸ்பூன்மல்லித்தூள் – இரண்டு ஸ்பூன்மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன் (காஷ்மீரி மிளகாய் தூள் பயன்படுத்தினால் இரண்டு டீஸ்பூன் சேர்க்கவும்)கொத்தமல்லி – சிறிதளவு – Advertisement -சோயா கறி கிரேவி செய்முறை விளக்கம் :சோயா கறி கிரேவி செய்வதற்கு முதலில் இரண்டு கப் அளவிற்கு மீல் மேக்கரை எடுத்து ஒருமுறை அலசி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் சுடு தண்ணீரை ஊற்றி ஒரு நிமிடம் ஊற விடுங்கள். அதன் பின்பு தண்ணீரை எல்லாம் கைகளால் பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு குக்கர் ஒன்றை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய்ந்ததும், எடுத்து வைத்துள்ள சோயாக்களை சேர்த்து ஒரு முறை ஈரம் போக வதக்கிக் கொள்ளுங்கள்.இப்போது அதே குக்கரில் மீதம் இருக்கும் எண்ணெயை ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்த்து பொடி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்குங்கள். பின்னர் இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி விடுங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வர நன்கு வதங்கியதும், தக்காளியை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். – Advertisement – இவை மசிய வதங்கி வந்ததும் மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரகத்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை மேற்கூறிய அளவின்படி சேர்த்துக் கொள்ளுங்கள். காஷ்மீரி மிளகாய் தூள் சேர்ப்பதாக இருந்தால் இரண்டு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேருங்கள். அது நல்ல நிறத்தையும், காரம் குறைவாகவும் கொடுக்கும். மசாலாக்களின் பச்சை வாசம் போக வதங்கியதும், ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து இரண்டு விசில் மட்டும் விட்டு எடுங்கள்.இதையும் படிக்கலாமே:பணம் தரும் குபேர முத்திரை வழிபாடுஅதன் பிறகு குக்கரை திறந்து மசித்து விடுங்கள். பின்பு நீங்கள் வறுத்து வைத்துள்ள சோயா உருண்டைகளையும் சேர்த்து கலந்து விடுங்கள். ஒரு நிமிடம் இவற்றை நன்கு கொதித்ததும் தேவையான அளவிற்கு உப்பு போட்டு, கிரேவி பதத்திற்கு வர தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள். சோயா கறி கொதித்து கெட்டியானதும், நறுக்கிய மல்லித்தழை தூவி அப்படியே இறக்கி வைக்க வேண்டியதுதான் சுடச்சுட இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, நான்ரொட்டி, ஊத்தாப்பம், சாதம் வைத்து கூட நீங்கள் சாப்பிடலாம், அவ்வளவு ருசியாக இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க!

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top