
– Advertisement –
தினமும் இட்லி, தோசை என்று ஒரே மாதிரியான டிபன் செய்து போர் அடித்து போனவர்களுக்கு, இந்த சோயா கீமா தோசை வித்தியாசமான சுவையை கொடுக்கப் போகிறது. கறி சுவையில் அற்புதமாக இருக்கும் இந்த சோயா கீமா செய்வதற்கு அதிக நேரம் கூட எடுப்பதில்லை. ஐந்தே நிமிடத்தில் சட்டென்று தயார் செய்து அசத்தக்கூடிய இந்த சோயா கீமா தோசை எப்படி தயாரிப்பது? என்னும் சமையல் குறிப்பு சார்ந்த தகவலை தொடர்ந்து காண்போம் வாருங்கள்.
சோயா கீமா தோசை செய்ய தேவையான பொருட்கள் :
மீல் மேக்கர் – 25பெரிய வெங்காயம் – ஒன்றுதக்காளி – ஒன்றுபச்சை மிளகாய் – ஒன்றுசீரகம் – ஒரு ஸ்பூன்கருவேப்பிலை – ஒரு கொத்துஇஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்கொத்தமல்லி – சிறிதளவுமஞ்சள் தூள் – கால் ஸ்பூன்மல்லித்தூள் – அரை ஸ்பூன்மிளகாய் தூள் – அரை ஸ்பூன்கரம் மசாலா – அரை ஸ்பூன்உப்பு – தேவையான அளவு
– Advertisement –
சோயா கீமா தோசை செய்முறை விளக்கம் :
சோயா கீமா தோசை செய்வதற்கு முதலில் சோயா கீமா தயார் செய்து கொள்ள வேண்டும். தேவையான பொருட்களை தயார் செய்து வைத்த பின்பு சோயா உருண்டைகளை சுடு தண்ணீரில் போட்டு 10 நிமிடம் ஊற வையுங்கள். அதற்குள் ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து ஒன்றிரண்டாக நறுக்கிக் கொள்ளுங்கள். தக்காளி பழத்தை சுத்தம் செய்து ஒன்றிரண்டாக நறுக்குங்கள். ஒரு பச்சை மிளகாயை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
கொஞ்சம் கறிவேப்பிலையை உருவி வைத்து அலசி வையுங்கள். பினர் இப்போது மிக்ஸர் ஜார் ஒன்றை எடுத்து வையுங்கள். அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, ஒரு டீஸ்பூன் சீரகம், அலசி வைத்துள்ள கருவேப்பிலை இலைகள் ஆகியவற்றை போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் ஊற வைத்துள்ள சோயா உருண்டைகளை தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து இதனுடன் சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து லேசாக வதக்கிய பின்பு, நீங்கள் அரைத்தவற்றையும் போட்டு வதக்குங்கள். பின்னர் மஞ்சள் தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு பிரட்டி விடுங்கள். மசாலாக்களின் பச்சை வாசம் நீங்கியதும், கொஞ்சம் போல் தண்ணீர் தெளித்து மூடி போட்டு, ரெண்டு நிமிடம் மூடி வைத்து வேக வையுங்கள்.
இதையும் படிக்கலாமே:தமிழ் புத்தாண்டு தானங்கள்
வெந்து தண்ணீர் வற்றியதும் நறுக்கிய மல்லித்தழை தூவி ஒரு பிரட்டு பிரட்டி அப்படியே இறக்கி வையுங்கள். இப்போது வழக்கம் போல தோசையை சூடான தோசை கல்லில் நன்கு பரப்பி அதன் மீது இந்த சோயா கீமாவை ரெண்டு டீஸ்பூன் சேர்த்து பரப்பி விடுங்கள். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடுங்கள். இதில் முதலில் முட்டையை பரப்பி, அதன் மீது கீமாவை பரப்பி செய்தாலும் ருசி சூப்பராக இருக்கும். சட்னி, சாம்பார் எதுவுமே தேவையில்லை இந்த சோயா கீமா தோசைக்கு! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam