சோயா கீமா மசாலா செய்முறை | soya keema masala seimurai in tamil

சோயா கீமா மசாலா செய்முறை | soya keema masala seimurai in tamil

Qries

– Advertisement –

அசைவம் சாப்பிடுபவர்களுக்கு அந்த அசைவத்தின் மூலம் அதிக அளவில் புரதச்சத்து கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சைவம் சாப்பிடுவதற்கு அந்த அசைவத்தில் கிடைக்கக்கூடிய புரதச்சத்து என்பது கிடைப்பது மிகவும் அரிது. அப்படி சைவப் பிரியர்களுக்கு சைவத்தில் புரதச்சத்து அதிகம் நிறைந்த பொருட்கள் ஒன்றாக திகழ்வதுதான் மீல் மேக்கர். இதில் இறைச்சியில் கிடைக்கக்கூடிய புரதச்சத்தில் பாதி அளவு இருக்கிறது என்று ஊட்டச்சத்து நிமிடங்கள் கூறுகிறார்கள்.
இதை எப்பொழுதும் போல் செய்யாமல் சற்று வித்தியாசமாக மட்டன் கீமா சுவையில் செய்து தரும்பொழுது சைவ பிரியர்களும் சரி அசைவ பிரியர்களும் சரி, இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த முறையில் நாம் சோயா கீமா மசாலா செய்தோம் என்றால் இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பிரியாணி, புலாவ் போன்ற அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள முடியும். மிகவும் சுவையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சோயா கீமா மசாலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –

தேவையான பொருட்கள்
சோயா சாங்ஸ் – 250 கிராம்,நெய் – 3 டீஸ்பூன்,சீரகம் – 1/2 ஸ்பூன்,வெங்காயம் – 2,உப்பு – தேவையான அளவு,இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்,தக்காளி – 4,மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்,மிளகாய் தூள் – 1 1/4 ஸ்பூன்,தனியாத்தூள் – 1 1/2 ஸ்பூன்,பச்சை பட்டாணி – 100 கிராம்,தயிர் – 75 எம் எல்,சீரகத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு,பச்சை மிளகாய் – 3
செய்முறை
முதலில் மீன் மேக்கரை சுடு தண்ணீரில் போட்டு 15 நிமிடம் அப்படியே மூடி வைத்து விடுங்கள். 15 நிமிடம் கழித்து இதில் இருக்கக்கூடிய தண்ணீரை முற்றிலுமாக நீக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி, நெய் உருகியதும் அதில் சீரகத்தை போட வேண்டும். சீரகம் சிவந்த பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து இந்த மசாலாவிற்கு தேவையான உப்பையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
– Advertisement –

வெங்காயம் நிறம் மாறியதும் இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட வேண்டும். இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாடை நீங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இரண்டு தக்காளியை அதில் சேர்த்து வதக்க வேண்டும். மீதம் இருக்கக்கூடிய இரண்டு தக்காளியை மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து அதையும் இதில் ஊற்றி விடுங்கள். பிறகு இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மூன்றையும் சேர்த்து தக்காளி மற்றும் இந்த மசாலாக்களின் பச்சை வாடை போகும் வரை வைத்து விடுங்கள்.
இவை அனைத்தும் பச்சை வாடை நீங்கிய பிறகு இதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள். பிறகு பச்சை பட்டாணியை அதில் சேர்க்க வேண்டும். காய்ந்த பட்டாணியாக இருந்தால் அதை வேகவைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இதை நன்றாக கலந்து விடுங்கள். 10 நிமிடம் இது அப்படியே இருக்கட்டும். அடுத்ததாக இதனுடன் நன்றாக கட்டி இல்லாமல் அடித்த தயிரை சேர்த்து ஒரு முறை கொதி வரும் வரை விட்டு விடுங்கள்.
– Advertisement –

ஒருமுறை கொதி வந்ததும் இதில் நாம் அரைத்து வைத்திருக்கும் சோயா கீமாவை சேர்த்து நன்றாக பிரட்டி இதனுடன் மேற்கொண்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். அந்த கீமாவில் மசாலா அனைத்தும் சேரும் வரை இரண்டு நிமிடம் அப்படியே வைத்திருங்கள். பிறகு இதில் ஒரு டீஸ்பூன் நெய், சீரகத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இது வேக வேக நெய் தனியாக பிரிந்து வர ஆரம்பிக்கும். அப்பொழுது பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக ஒரு முறை கலந்து ஒரு நிமிடம் அடுப்பில் வைத்திருந்து இறக்கி விட வேண்டும். சுவையான சோயா கீமா மசாலா தயாராகி விட்டது.
இதையும் படிக்கலாமே:நாகர்கோயில் ஸ்பெஷல் புளிக்கறி செய்முறை
அசைவ பிரியர்களுக்கு எப்படி அசைவம் சாப்பிடுவது மிகவும் பிடிக்குமோ அதே அசைவ சுவையில் சைவத்திலும் நம்மால் செய்ய முடியும் .அந்த வகையில் தான் மட்டன் கீமாவை போலவே சோயா சங்சை வைத்து இந்த கீமாவை ஒரு முறை வீட்டில் செய்து கொடுத்து பாருங்கள். வாரத்திற்கு ஒரு முறையாவது செய்ய வேண்டும், சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்துவிடும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top