ஜாக் ப்ரூட் 65 செய்முறை | Jackfruit 65 recipe in tamil

ஜாக் ப்ரூட் 65 செய்முறை | Jackfruit 65 recipe in tamil

Qries

– Advertisement –

முக்கனிகளில் ஒன்றாக திகழக்கூடியது தான் பலாப்பழம். இந்த பலாப்பழத்தை வைத்து பல வகைகளில் உணவுப் பொருட்களை நாம் தயார் செய்தாலும் அசைவ உணவிற்கு இணையான சுவையில் திகழக் கூடியது தான் பலா காயை வைத்து செய்யக்கூடிய 65. இது அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக திகழும். எவ்வளவோ பொருட்களை வைத்து 65 செய்திருந்தாலும் இந்த பலாக்காய் 65 என்பது சுவையில் மிகவும் அபாரமாக இருக்கும்.
பலாப்பழ சீசன் முடிவதற்குள் ஒருமுறை பலா காயை வைத்து இந்த முறையில் 65 செய்து வீட்டில் கொடுத்தால் யாருமே இது ஒரு சைவ 65 என்று நம்பவே மாட்டார்கள். அந்த அளவிற்கு அசைவ சுவை மிகுந்து இருக்கும். அசைவ பிரியர்களுக்கு மிகவும் ஏற்ற ஒரு சைவ உணவாக இந்த ஜாக்ப்ரூட் 65 திகழ்கிறது. இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் ஜாக்ரூட் 65 எப்படி செய்வது என்றுதான் பார்க்கப் போகிறோம்.
– Advertisement –

தேவையான பொருட்கள்

பலாக்காய் – ஒன்று
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
அரிசி மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
குழம்பு மிளகாய்த்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
கான்பிளவர் மாவு – 2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு எ
லுமிச்சை சாறு – அரைப்பழம்

செய்முறை
முதலில் கைகளில் நன்றாக எண்ணெய்யை தடவிக் கொண்டு பலாக்காய் நறுக்க வேண்டும். அதில் இருக்கும் கூடிய தோலையும், நடு தண்டு பகுதியும் நீக்கிவிட்டு சிக்கன் பீஸ் போல சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பிறகு இதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பலாக்காயை சேர்த்து அதனுடன் பாதி அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக விட வேண்டும். அரைவேக்காடு வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதில் இருக்க கூடிய பலாக்காயை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த பலாக்காயில் தடவுவதற்கு மசாலாவை தயார் செய்து கொள்வோம்.
– Advertisement –

இதற்கு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, மிளகாய்த்தூள், குழம்பு மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, கான்பிளவர் மாவு, தயிர், உப்பு, எலுமிச்சை சாறு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். முக்கியமான குறிப்பு நாம் வேக வைக்கும் போது உப்பு சேர்த்து இருக்கிறோம் என்பதால் இந்த மசாலாவில் சேர்க்கக் கூடிய உப்பை கவனமாக சேர்க்க வேண்டும்.
இப்பொழுது இந்த மசாலாவை நன்றாக கலந்து கொள்ளுங்கள். தண்ணியாக இருக்க கூடாது. சிறிது கெட்டியாக இருக்க வேண்டும். நாம் வேக வைத்திருக்கும் பலாக்காயை இந்த மசாலாவில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை ஊற வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கலந்த உடனே பொறித்து விடலாம்.
– Advertisement –

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் குறைந்த தீயில் அடுப்பை வைத்துவிட்டு நாம் கலந்து வைத்திருக்கும் பலாக்காயை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட வேண்டும். ஒரு புறம் நன்றாக சிவந்த பிறகு மற்றொரு புறம் இதை திருப்பி போட்டு நன்றாக சிவக்கும் வரை வேக விட வேண்டும்.
அடுப்பு குறைந்த தீயில் தான் இருக்க வேண்டும். இதில் நன்றாக நிறம் வர வேண்டும் என்று நினைப்பவர்கள் ஃபுட் கலரை சேர்த்துக் கொள்ளலாம். இரண்டு புறமும் நன்றாக வெந்த பிறகு எண்ணெயிலிருந்து இந்த பலாக்காயை எடுத்து எண்ணெய் வடிந்த பிறகு தட்டில் எடுத்து வைத்து விடலாம். கடைசியாக சிறிது கருவேப்பிலையை எண்ணெயில் போட்டு பொரித்து மேலே அலங்காரத்துக்கு வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சிக்கன் 65 விட சுவை மிகவும் அதிகமாக இருக்கக்கூடிய ஜாக்ரூட் 65 தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: பூண்டு கருவேப்பிலை பொடி செய்முறை
சைவப்பிரியர்களும் அசைவ உணவை சாப்பிடலாம். அசைவ பிரியர்களும் அசைவ சுவையில் சைவ உணவை சாப்பிடலாம் என்பதற்கு இணையாக இந்த ஜாக் ப்ரூட் 65 திகழும். ஒரு முறை செய்து பார்த்து ருசியுங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top