தக்காளி உளுந்து சட்னி ரெசிபி | Thakkali ulunthu chutney recipe

தக்காளி உளுந்து சட்னி ரெசிபி | Thakkali ulunthu chutney recipe

Qries

– Advertisement –

எப்போதும் ஒரே போல சட்னி செய்து கொடுத்து வருபவர்களுக்கு, இந்த ஒரு சட்னி வித்தியாசமான சுவையை கொடுக்கக் கூடியதாக அமையப் போகிறது. கருப்பு உளுந்து கொண்டு ஆரோக்கியமான இந்த சட்னியை இதே மாதிரி நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க. நீங்கள் எவ்வளவு இட்லி கொடுத்தாலும், இன்னும் இந்த சட்னிக்காகவே வேண்டும் வேண்டும் என்று சளைக்காமல் கேட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சுவை மிகுந்த இந்த தக்காளி உளுந்து சட்னி எப்படி தயாரிப்பது? என்பதை தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் கற்றுக் கொள்வோம் வாருங்கள்.
தக்காளி உளுந்து சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பூண்டு பல் – 6
கருப்பு உளுந்து – 4 ஸ்பூன்
கருவேப்பிலை – இரண்டு கொத்து தக்காளி – 4
கல் உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்:
– Advertisement –

சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
வரமிளகாய் – ஒன்று
தக்காளி உளுந்து சட்னி செய்முறை விளக்கம்:
தக்காளி உளுந்து சட்னி செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் காரத்திற்கு நான்கு வர மிளகாய்களை சேர்த்து வதக்கி, பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்து கொள்ளுங்கள். இவை நன்கு வதங்கியதும் கருப்பு உளுந்து நாலு ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். உடைத்த கருப்பு உளுந்து சேர்த்து வதக்கும் பொழுது நல்ல அருமையான வாசம் வரும். அந்த சமயத்தில் இரண்டு கொத்து கருவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து உருவி போட்டுக் கொள்ளுங்கள்.
இவை லேசாக வதங்கியதும் பொடி பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து மசிய வதங்க விட வேண்டும். இவை வதங்குவதற்கு தேவையான அளவிற்கு கல் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள், சால்ட் உப்பை தவிர்த்து விடுவது நல்லது. தக்காளி மசிய வதங்கி வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். நன்கு ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து நைஸ் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.
– Advertisement –

இதையும் படிக்கலாமே:சூரசம்ஹாரம் முடிந்தவுடன் குளிக்கும் முறை
இப்போது இதற்கு ஒரு சிறு தாளிப்பை கொடுக்க வேண்டும். தாளிக்க தேவையான எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டு, ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வையுங்கள். ஒரு ஸ்பூன் சமையல் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலை, ஒரு வர மிளகாயை கிள்ளி சேர்த்து தாளித்து சட்னியுடன் கொட்டி இறக்கினால், அருமையான தக்காளி உளுந்து சட்னி மணக்க மணக்க தயார்! இந்த சட்னியை இட்லி, தோசை, சப்பாத்தி, குறிப்பாக கல் தோசைக்கு வைத்து சாப்பிட்டு பாருங்கள், அடடா… என்று நீங்கள் சப்புக் கொட்டி சாப்பிடுவீர்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top