தயிர் இட்லி வித்தியமான சுவையில் சூப்பரானா புது ரெசிபி மிஸ் பண்ணாதீங்க

தயிர் இட்லி வித்தியமான சுவையில் சூப்பரானா புது ரெசிபி மிஸ் பண்ணாதீங்க

Qries

– Advertisement –

பெரும்பாலும் காலை உணவிற்கு இட்லி தோசை என ஏதாவது ஒன்றை தான் செய்வோம் தோசை பொருத்த வரையில் சாப்பிட சாப்பிட ஊற்றி கொடுத்து விடுவோம். அதனால் அது மீதமாகும் வாய்ப்பு மிக குறைவு ஆனால் இட்லியை பொருத்த வரை எப்படியும் காலையில் செய்தால் மீந்து விடும் இதை இரவும் சாப்பிட முடியாது. அந்த கொஞ்ச இட்லியை வைத்து வேறு எதுவும் செய்ய முடியாமல் சில நேரங்களில் வீணாக தூக்கி கூட போட்டு விடுவோம்.
இனி இதுபோல காலையில் சுட்டு இட்லியில் மீந்த விட்டால் அதை வீணாக்காமல் ஒரு அருமையான தயிர் இட்லி ரெசிபி செய்து விடலாம். இந்த ரெசிபியை நீங்கள் ஒரு முறை செய்து பாருங்கள். இனி இதற்காகவே இட்லியை நீங்கள் காலையில் ஊற்றும் போது தனியாக எடுத்து வைத்து விடுவீர்கள். அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும் வாங்க தயிர் இட்லி எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
– Advertisement –

தயிர் இட்லி செய்முறை விளக்கம்
இந்த இட்லி செய்ய முதலில் ஒரு பவுலில் அதிகம் புளிக்காத பிரஷ் ஆன தயிர் ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து இந்த தயிரின் அளவிற்கு கால் பாதம் அளவு தண்ணீர் ஊற்றி 1/4 டீஸ்பூன் உப்பு அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கட்டிகள் இல்லாமல் இந்த தயிரை கரைத்து வைத்து விடுங்கள். தயிர் ஓரளவுக்கு லூசாக இருக்க வேண்டுமே தவிர ரொம்ப கெட்டியாகவும் தண்ணியாகவும் இருக்கக் கூடாது.
அடுத்து அடுப்பில் சின்ன தாளிப்பு கரண்டி வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ஒரு ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம், சிறிய துண்டு இஞ்சி பொடியாக நறுக்கி சேர்த்து இத்துடன் கால் டீஸ்பூன் பெருங்காயம், ஒரு கொத்து கருவேப்பிலை, 10 முந்திரி பருப்பு, ஒரு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி சேர்த்து முந்திரி பருப்பு நிறம் மாறும் வரை வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.
– Advertisement –

இப்போது இந்த தாளிப்பை நாம் ஏற்கனவே கலந்து வைத்திருக்கும் தயிரில் ஊற்றிய பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலை பொடியாக நறுக்கி இதில் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இந்தத் தாளிப்பு பத்து நிமிடம் தயிரில் ஊறிய பிறகு இட்லியை எடுத்து தயிரில் சேர்த்து விடுங்கள். இதற்கு சூடாக உள்ள இட்லியை பயன்படுத்தக் கூடாது. அதே நேரத்தில் இட்லி சாப்டாக இருக்க வேண்டும். சில நேரங்களில் இட்லி கல்லு போல வந்து விடும் அது போன்ற இட்லியில் இதை செய்ய வேண்டாம்.
இதையும் படிக்கலாமே:2 நிமிஷத்துல சாம்பார் பொடி சேர்த்து ரொம்பவே வித்தியாசமான சட்னி ரெசிபி. இட்லி தோசை பூரி சப்பாத்திக்கு செமையா இருக்கும்.
அடுத்து தயிரில் இட்லி ஊறிய பிறகு இதன் மேல் அலங்காரத்திற்கு கொஞ்சமாக காரணபூந்தி, மாதுளை பழ முத்துக்கள் இவற்றை சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும். அதே நேரத்தில் ஒரு வித்தியாசமான சாட் ஐட்டத்தை பிள்ளைகளுக்கு செய்து கொடுத்தது போலவும் இருக்கும். இந்த ரெசிபியை மறக்காம ட்ரை பண்ணி பாருங்க.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top