– Advertisement –
விதவிதமான சட்னி வகைகளில் ஆரோக்கியம் நிறைந்த இந்த கொத்தமல்லி சட்னி அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும். இட்லி, தோசை மட்டும் அல்லாமல் கிச்சடி, உப்புமா, பணியாரம் போன்றவற்றுக்கும் தொட்டுக் கொள்ள சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கக் கூடிய இந்த கொத்தமல்லி தேங்காய் சட்னி ரொம்பவும் சுலபமாக ஐந்தே நிமிடத்தில் எப்படி தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
தேங்காய் கொத்தமல்லி சட்னி செய்ய தேவையான பொருட்கள் :
தேங்காய் மூன்று – சில்லுபொட்டுக்கடலை – ரெண்டு டேபிள் ஸ்பூன்பெரிய வெங்காயம் – பாதிபச்சை மிளகாய் – இரண்டுஇஞ்சி – ஒரு விரல் நீளம்புதினா இலைகள் – 10கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவுஉப்பு – தேவையான அளவு
– Advertisement –
தாளிக்க :சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன்கடுகு – அரை ஸ்பூன்உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன்கருவேப்பிலை – ஒரு கொத்துவரமிளகாய் – 1
தேங்காய் கொத்தமல்லி சட்னி செய்முறை விளக்கம் :
தேங்காய் கொத்தமல்லி சட்னி செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மூன்று சில்லு தேங்காய்களை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு மிக்ஸர் ஜாரை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டுகளை போடுங்கள். இதனுடன் ரெண்டு டேபிள் ஸ்பூன் பொட்டுக் கடலையை சேர்த்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
இவற்றுடன் பாதி அளவிற்கு வெட்டிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் தேங்காய் சட்னிக்கு நல்ல ஒரு சுவையை கொடுக்கும். காரத்திற்கு இரண்டு பச்சை மிளகாயை கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். புதினா இலைகள் இருந்தால் 10 இலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள், இல்லை என்றால் அதனை தவிர்த்துக் கொள்ளலாம். நறுக்கிய கொத்தமல்லி தழை பிரெஷ் ஆக கழுவி சேர்த்துக் கொள்ளுங்கள். தேங்காயுடன் கொத்தமல்லி சேரும் பொழுது சட்னி ருசியாக இருக்கும். இப்போது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நீர்க்க கரைக்காமல் சட்னி கெட்டியாக இருப்பது சுவை தரும்.
இதையும் படிக்கலாமே:மழை நீர் பரிகாரம்
இதனுடன் தாளிப்புக்கு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு சமையல் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும், உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின் அதனுடன் ஒரு கொத்து நறுக்கிய கருவேப்பிலை, ஒரு வர மிளகாயை கிள்ளி சேர்த்து தாளித்து சட்னியுடன் கொட்டி கலந்து வைத்து இறக்கினால், சூப்பரான சுவையான தேங்காய் கொத்தமல்லி சட்னி நொடியில் தயார்! இந்த சட்னி கிச்சடி, பணியாரம், உப்புமா போன்றவற்றுக்கு ரொம்ப சூப்பராக இருக்கும். காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கும் கெட்டியாக தொட்டு சாப்பிடும் பொழுது ருசி அபாரமாக இருக்கும். நீங்களும் இதே போல சுவையான தேங்காய் கொத்தமல்லி சட்னியை தயார் செய்து கொடுத்து வீட்டில் இருக்கும் அனைவரின் பாராட்டையும் பெறலாமே!
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam