இன்றைய காலத்தில் பல குழந்தைகள் மதிய உணவை முழுமையாக சாப்பிடுகிறார்களா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் இல்லை என்று தான் கூற வேண்டும். பல குழந்தைகள் தங்களுடைய மதிய உணவை முழுமையாக சாப்பிடாமல் திரும்ப எடுத்து வருவார்கள். அப்படி எடுத்து வரக்கூடிய பிள்ளைகளுக்கு இப்படி ஒரு முறை தேங்காய் முட்டை சாதம் செய்து கொடுத்து பாருங்கள். டிபன் பாக்ஸ் காலியாகி தான் வரும். அந்த தேங்காய் முட்டை சாதத்தை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.தேவையான பொருட்கள்தேங்காய் – ஒரு கைப்பிடிபூண்டு – 3 பல்கருவேப்பிலை – 2 கொத்துகாய்ந்த மிளகாய் – 6சீரகம் – 1/2 டீஸ்பூன்எண்ணெய் – 2 டீஸ்பூன்கடுகு உளுந்து – ஒரு டீஸ்பூன்கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்பெரிய வெங்காயம் – ஒன்றுஉப்பு – தேவையான அளவுமுட்டை – 2,வடித்த சாதம் – ஒரு கப் – Advertisement -செய்முறைமுதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பொடியாக நறுக்கிய தேங்காய் ஒரு கைப்பிடி அளவு போட்டு, அதனுடன் தோல் உரித்த பூண்டு, நான்கு காய்ந்த மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை, சீரகம் இவற்றைப் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அரைத்த பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு உளுந்து, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, கடலைப்பருப்பு போன்றவற்றை சேர்த்து கடலைப்பருப்பு நன்றாக சிவக்கும் வரை வதக்க வேண்டும்.கடலைப்பருப்பு சிவந்த பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமானதும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை அதில் சேர்த்து நன்றாக கலந்து எண்ணெயிலேயே தேங்காய் வதங்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். தேங்காயும் நன்றாக வதங்கிய பிறகு அதில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். – Advertisement – முட்டை வெந்த பிறகு அதில் வடித்த ஒரு கப் சாதத்தை போட்டு கலந்தால் போதும் மிகவும் சுவையான தேங்காய் முட்டை சாதம் தயாராகிவிட்டது. இதில் வாசனைக்காக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையையும் தூவி கலந்து இறக்க நன்றாக இருக்கும். அதேபோல் மிளகுத்தூளை தூவி கலந்து விட்டு இறக்க சற்று காரசாரமாக சுவையாக இருக்கும்.இதையும் படிக்கலாமே: ரோட்டு கடை பரோட்டா சால்னாமிகவும் எளிதில் செய்யக்கூடிய இந்த தேங்காய் முட்டை சாதத்தை குழந்தைகள் ஒரு முறை சாப்பிட்டால் போதும். அடிக்கடி கேட்பார்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் செய்யும் பொழுது மதிய உணவை மீதம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam