தேன் நெல்லிக்காய் ரெசிபி | Then nellikkai recipe

தேன் நெல்லிக்காய் ரெசிபி | Then nellikkai recipe

Qries

– Advertisement –

சுத்தமான தேன் நெல்லிக்காய் நம் கைகளால் நம் வீட்டில் தயாரித்தால் தான் உண்டு. கடைகளில் விற்கப்படும் நெல்லிக்காய் சர்க்கரை பாகை கொண்டு பெரும்பாலும் தயாரிக்கப்படுகிறது. எவ்வளவு தரமானதாக நீங்கள் வாங்கினாலும், அது நம் கையால் செய்யப்படும் நம்பகத் தன்மையைப் போல வராது. தினமும் 1 தேன் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் உண்டாகும் 100 நோய்கள் நம்மை அண்டாது. ஆரோக்கியத்துக்கு வலு சேர்க்கும் இந்த தேன் நெல்லிக்காய் இவ்வளவு ஈசியாக எப்படி தயாரிக்கப் போகிறோம்? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
தேன் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய பலன்கள் :
முதுமையை விரட்டி அடித்து இளமையை தக்க வைத்துக் கொள்வதில் இந்த தேன் நெல்லிக்காய் முதலிடம் பிடித்துள்ளது. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுபவர்கள் தேகம், பளபளவென்று பளிங்கு போல மின்னும். இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும், இதனால் ஹீமோகுளோபின் உயர்ந்து, உடல் சோர்வை விரட்டியடிக்கும்.
– Advertisement –

இதய தசைகளை வலுவாக்கி, இதய நோய்கள் வராமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இதை தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம். கண் பார்வை தெளிவடையும். கண் சார்ந்த எல்லா பிரச்சனைகளையும் விரட்டி அடிக்கும், ஆற்றலும் இதற்கு உண்டு. நரம்பு, சிறுநீரக தொந்தரவுகளையும் விரட்டும். முடி உதிர்வது நின்று, தலைமுடியை நன்கு செழிப்பாக வளர செய்யும். உச்சி முதல் பாதம் வரை பல நூறு நோய்களை விரட்டியடிக்கும்.
தேன் நெல்லிக்காய் தயாரிக்கும் முறை :
தேன் நெல்லிக்காய் செய்வதற்கு சிறிய நெல்லிக்காயை விட பெரிய நெல்லிக்காய் உகந்தது ஆகும். ஒரு நெல்லிக்காயை தினமும் வெறும் வாயில் சாப்பிட்டு வருபவர்களுக்கு, டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போகும் என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள். அந்த அளவிற்கு சிறப்பு மிகுந்த இந்த நெல்லிக்காய் தயாரிப்பதற்கு முதலில் தேவையான அளவிற்கு நெல்லிக்காய்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

அதை நன்கு நீரில் அலசி சுத்தம் செய்த பின்பு இட்லி பானையில் அப்படியே வைத்து மூடி பத்து நிமிடம் ஆவியில் வேக வைக்க வேண்டும். எட்டிலிருந்து பத்து நிமிடத்திற்குள் வெந்துவிடும். இதை நீரில் வேகவைக்க கூடாது, சத்துக்கள் போய்விடும், எனவே இந்த முறையில் ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வேக வைத்த நெல்லிக்கனிகளை துண்டு துண்டாக பிளந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
மற்றொரு முறையில் முழு நெல்லிக்காயை ஃபோர்க் ஸ்பூன் வைத்து ஆங்காங்கே துளைகளை போட்டு கொண்டு பயன்படுத்தலாம். இந்த நெல்லிக்காயை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டுக் கொள்ளுங்கள். பின் தேவையான அளவிற்கு தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். நெல்லிக்காய் முழுவதுமாக தேனை உறிந்து கொள்ளும், எனவே மூழ்கும் அளவிற்கு தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். தேன் சேர்த்த பின்பு ஒருமுறை நன்கு கலந்து விட்டு பின் மூடி போடாமல் வெள்ளை காட்டன் துணியை வைத்து மேற்புறப்பகுதியை தூசு போகாமல் மூடிக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:29-3-2025, 6 கிரக சேர்க்கை பலன்
இந்த பாட்டிலை ஒரு வாரம் வரை வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். ஏழு நாட்கள் வெயிலில் வைத்து எடுத்தால், சீக்கிரம் கெட்டுப் போகாது. கொஞ்சமாக செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள், ஒரு நாள் ஊற விட்டு அப்படியே சாப்பிடலாம். வெயிலில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நீண்ட நாட்கள் வைத்திருந்து பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள், வெயிலில் வைத்திருந்து அதன் பின்பு நீங்கள் ஸ்டோர் செய்து பயன்படுத்தலாம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top