– Advertisement –
எப்போதும் ஒரே மாதிரியான தோசையை சுட்டு போர் அடித்து போனவர்களுக்கு, இந்த கார தோசை அசத்தலான மாற்றமான ஒரு நல்ல சுவையை நிச்சயம் கொடுக்கும். ரொம்பவே எளிதான முறையில் சட்னி தேவையில்லாத கார தோசை சுடச்சுட மொறுமொறுன்னு இப்படி சுட்டு கொடுத்து பார்த்தால் பத்து தோசை இருந்தா கூட இன்னும் வேண்டுமென்று கேட்பார்கள். சுடச்சுட கார தோசை ரெசிபி எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
பூண்டு கார தோசை செய்ய தேவையான பொருட்கள்:
தோசை மாவு – தேவையான அளவு
பூண்டு – 10 பல்
வரமிளகாய் – 8
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு கார தோசை செய்முறை விளக்கம்:
பூண்டு கார தோசை செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வரமிளகாய்களை உங்கள் காரத்திற்கு ஏற்ப எடுத்து காம்பு நீக்கி சுத்தமான தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் போல மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் போதும். ஒரு பத்து நிமிடம் அப்படியே ஊற விடுங்கள். அதே போல சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை எடுத்து விதைகள் நீக்கி கொஞ்சம் போல் தண்ணீர் விட்டு ஊற வையுங்கள். அதற்குள் மற்ற வேலைகளை செய்து விடலாம். 10 பல் பூண்டு எடுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து ரெண்டு நிமிடம் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஊற வைத்துள்ள மிளகாய்களை தண்ணீரை வடிகட்டி விட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு சுற்று சுற்றி எடுத்துவிட்டு பின் ஊற வைத்துள்ள புளியை சேர்த்து அரையுங்கள். இப்போது ஆறவிட்டு எடுத்துள்ள பூண்டு பற்களையும் சேர்த்து கொஞ்சம் போல கல் உப்பு சேர்த்து நைசாக அரைத்து எடுக்க வேண்டும். அரைத்து எடுத்த இந்த விழுதினை கெட்டியாக அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து, அதில் ஒரு தோசை கல்லை வையுங்கள். வழக்கம் போல ஒன்றரை கரண்டி தோசை மாவை எடுத்து நன்கு பெரிதாக பரப்பிக் கொள்ளுங்கள்.
– Advertisement –
இதையும் படிக்கலாமே:கடன் பிரச்சனை காணாமல் போக பிரியாணி இலை பரிகாரம்.
ஒரு ரெண்டு நிமிடம் வேக விட்டு அதன் பிறகு நீங்கள் அரைத்து வைத்துள்ள கார விழுதை அப்படியே தோசையின் மீது தடவ வேண்டும். அடிப்பகுதி நன்கு பொன்னிறமாக சிவந்தவுடன் அப்படியே முறுவலாக ஹோட்டலில் கொடுப்பது போல சுருட்டி எடுத்து தட்டில் வைத்து சட்னி கூட தேவையில்லை அப்படியே சாப்பிட்டு விடலாம், அவ்வளவு அருமையாக காரசாரமாக, ருசியாக இருக்கக்கூடிய இந்த கார தோசை ரெசிபியை இதே அளவுகளில் நீங்களும் ஒரு முறை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கு ரொம்பவே பிடித்து போய்விடும் இனி அடிக்கடி செய்வீங்க.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam