நெல்லிக்காய் ஊறுகாய் செய்முறை | Amla pickle recipe in tamil

நெல்லிக்காய் ஊறுகாய் செய்முறை | Amla pickle recipe in tamil

Qries

– Advertisement –

உணவே மருந்து என்னும் முறையில் நம்முடைய மருந்து பொருட்களாக நாம் கருதக்கூடிய நெல்லிக்காயை வைத்து எப்படிப்பட்ட முறையில் உணவுகளை செய்து தந்தால் யாரும் அதை வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள் என்றுதான் நாம் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது நெல்லிக்காயை சாப்பிட பிடிக்காதவர்கள் கூட அதை விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையான நெல்லிக்காய் ஊறுகாயை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
நெல்லிக்காயில் அதிக அளவு விட்டமின் சி சத்து நிறைந்திருக்கிறது. மேலும் இந்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என்ற வீதம் சாப்பிட்டு வரும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி என்பது அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், வயிற்றுப் புண்ணை குணமாகவும், இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கவும், கழிவுகளை வெளியேற்றவும், புற்றுநோய் வராமல் பாதுகாக்கவும் இந்த நெல்லிக்காய் பெரிதும் துணை புரிகிறது.
– Advertisement –

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – 20
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 5 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை
முதலில் நெல்லிக்காயை சிறிது தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துவிட்டு ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும். நெல்லிக்காய் நன்றாக வெந்ததும் அந்த நெல்லிக்காயை எடுத்து ஆற வைத்துக்கொண்டு கொள்ளவேண்டும். தண்ணீரில் போட்டு வேக வைக்க விருப்பம் இல்லாதவர்கள் இட்லி அவிப்பது போல் நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்தும் எடுத்துக் கொள்ளலாம்.
நெல்லிக்காய் நன்றாக ஆறியதும் அதனுள் இருக்கக்கூடிய கொட்டையை மட்டும் நீக்கிவிட்டு நெல்லிக்காயை ஒவ்வொரு இதழாகப் பிரித்து மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், மிளகாய் தூள் இவற்றை சேர்த்து நன்றாக அதன் பச்சை வாடை போகும் வரை குறைந்த தீயில் வைத்து கலந்து விட வேண்டும்.
– Advertisement –

வெந்தயத்தை முழுதாக போட விருப்பம் இல்லாதவர்கள் இதில் பொடி செய்து போட்டுக் கொள்ளலாம். கருவேப்பிலை சேர்க்க விருப்பம் இருப்பவர்கள் இந்த நேரத்தில் கருவேப்பிலையையும் சேர்த்துக் கொள்ளலாம். மிளகாய் தூளின் நிறம் நன்றாக மாறியதும் நாம் அரைந்து வைத்திருக்கும் நெல்லிக்காய் விழுதை இதில் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
முதலில் நெல்லிக்காய் எண்ணெய் அனைத்தையும் உரிந்து கொள்ளும். பிறகு அது வேகவேக எண்ணெய் வெளியே வரும். எப்படி நாம் அல்வா தயார் செய்வோமோ அதே போல் தான் இந்த நெல்லிக்காய் ஊறுகாயும் நாம் தயார் செய்ய வேண்டும். எண்ணெய் பிரிந்து சட்டியில் ஒட்டாமல் நெல்லிக்காய் ஊறுகாய் வரும் வரை அதை கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். எண்ணெய் பிரிந்து வர ஆரம்பித்ததும் விருப்பம் இருப்பவர்கள் இதில் ஒரு துண்டு மட்டும் வெல்லத்தை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
– Advertisement –

இது நன்றாக ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி பிரிட்ஜில் வைத்துக் கொண்டால் ஆறு மாதம் வரை கெடாது. தினமும் இந்த நெல்லிக்காய் ஊறுகாயை இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றிற்கெல்லாம் தொட்டுக் கொள்ள உபயோகப்படுத்தலாம். குழம்பு செய்யாத நேரத்தில் சுடு சாதத்தில் இந்த நெல்லிக்காய் ஊறுகாயை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி பிணைந்து சாப்பிடவும் செய்யலாம்.
இதையும் படிக்கலாமே பாசிப்பருப்பு ரிப்பன் பக்கோடா செய்முறை
எளிதில் செய்யக்கூடிய இந்த நெல்லிக்காய் ஊறுகாயை ஒரு முறையாவது வீட்டில் செய்து பார்த்தால்தான் வீட்டில் இருப்பவர்கள் எந்த அளவிற்கு இதை விரும்பி சாப்பிடுவார்கள் என்பதை உணர முடியும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top