
– Advertisement –
விட்டமின் சி அதிகம் இருக்கக்கூடிய பொருளாக திகழ்வதுதான் நெல்லிக்காய். நெல்லிக்காயை நம்முடைய உணவில் ஏதாவது ஒரு ரூபத்தில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நெல்லிக்காயை வீட்டில் இருக்கக்கூடியவர்கள் அனைவருமே விரும்பி சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் நெல்லிக்காயை வைத்து தொக்கு செய்தால் போதும்.
இந்த தொக்கை வைத்து இட்லி, தோசை, சப்பாத்தி என்று அனைத்து டிபன் ஐட்டத்திற்கு மட்டுமல்லாமல் தயிர் சாதம், எலுமிச்சை சாதம் என்று வெரைட்டி ரைசிக்கும் நாம் தொட்டுக் கொள்ளலாம். நெல்லிக்காய் சீசன் முடிவதற்குள் ஒருமுறை இப்படி செய்து வைத்துக் கொண்டோம் என்றால் ஒரு மாதம் வரை நமக்கு எந்த கவலையும் இருக்காது. அப்படிப்பட்ட சுவை மிகுந்த நெல்லிக்காய் தொக்கு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 1/2 கிலோகடுகு – 2 டீஸ்பூன்வெந்தயம் – 1/2 டீஸ்பூன்மல்லி – 1/2 டீஸ்பூன்நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்பூண்டு – 6 பல்பச்சை மிளகாய் – 2மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுமிளகாய் தூள் – 3 டீஸ்பூன்புளி – ஒரு எலுமிச்சை அளவுகருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
செய்முறை
முதலில் ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றி கழுவிய நெல்லிக்காயை அந்த குக்கருக்குள் வைத்து அதனுடன் அரைக்கப் அளவிற்கு மட்டும் தண்ணீர் ஊற்றி குக்கர் மூடியை மூடி மூன்று விசில் வரும் வரை அடுப்பில் வைத்து விடுங்கள். விசில் முழுவதும் போன பிறகு குக்கரை திறந்து நெல்லிக்காயை ஆற வைத்துக் கொள்ளுங்கள். நெல்லிக்காய் ஆறிய பிறகு அதனுள் இருக்கக்கூடிய விதைகளை மட்டும் நீக்கிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
நெல்லிக்காயை வேக வைப்பதற்காக நாம் தண்ணீர் ஊற்றினோம் அல்லவா? அந்த தண்ணீரையும் நெல்லிக்காயுடன் சேர்த்து நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒரு டீஸ்பூன் கடுகு, வெந்தயம், மல்லி இவை மூன்றையும் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வாசம் வரும் வரை குறைந்த தீயில் வைத்து வறுக்க வேண்டும். அனைத்தும் நன்றாக சிவந்த பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது ஒரு மண்சட்டி அல்லது அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் கடுகு, பொடியாக நறுக்கிய பூண்டு, முழுதாக கீறிய பச்சை மிளகாய் இவற்றை போட்டு இதனுடன் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பூண்டு வெந்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் நெல்லிக்காய் விழுதையும் அதில் சேர்த்து ஒரு முறை கலந்து மூடி போட்டு இரண்டு நிமிடம் வேக விடுங்கள்.
– Advertisement –
பிறகு இதில் திக்காக கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலையும் ஊற்றி ஒருமுறை நன்றாக கலந்து மறுபடியும் மூடி போட்டு அந்த புளியின் பச்சை வாடை போகும் வரை வேக விட வேண்டும். இது குறைந்தது இரண்டு நிமிடமாவது எடுத்துக் கொள்ளும். பிறகு மூடியை திறந்து இதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் மற்றும் நாம் அரைத்து வைத்திருந்த வெந்தய மல்லி பொடி இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு மூன்றிலிருந்து நான்கு நிமிடம் வரை வேக விட வேண்டும்.
நடுவில் அவப்பொழுது மூடியை திறந்து கரண்டியை வைத்து ஒருமுறை கலந்து விட வேண்டும். இல்லையெனில் அடி பிடிப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். நான்கு நிமிடம் கழித்து நாம் பார்க்கும் பொழுது நாம் ஊற்றிய எண்ணெய் தனியாக பிரிந்து வந்திருக்கும். இப்பொழுது மறுபடியும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெயை ஊற்றி நன்றாக ஒரு முறை கலந்து விடுங்கள். ஒரு நிமிடம் அடுப்பிலேயே வைத்துவிட்டு பிறகு அடுப்பில் இருந்து இறக்கிவிடலாம். இது நன்றாக ஆரியபிறகு காற்று புகாத ஒரு பாட்டிலில் இந்த தொக்கை போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான நெல்லிக்காய் தொக்கு தயாராகிவிட்டது. இதை ஃப்ரிட்ஜில் வைக்காமல் உபயோகப்படுத்தினாலேயே ஒரு மாதம் வரை கெட்டுப் போகாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே:முட்டைக்கோஸ் முட்டை அவியல்
சத்து மிகுந்த காய்கறிகளையும், உணவுப் பொருட்களையும் ஏதாவது ஒரு ரூபத்தில் நாம் எடுத்துக் கொள்வதன் மூலம் நமக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்பதற்கு இணங்க நெல்லிக்காயை இந்த முறையில் தொக்காக செய்து உபயோகப்படுத்தி பாருங்கள். நெல்லிக்காயின் சத்தம் கிடைக்கும் வேலையும் மிச்சம் ஆகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam