நேந்திர பழ ஜாமுன் செய்முறை | Nendra pazha jamun recipe in tamil

நேந்திர பழ ஜாமுன் செய்முறை | Nendra pazha jamun recipe in tamil

Qries

– Advertisement –

கேரளாவில் அதிகளவில் கிடைக்கக்கூடிய நேந்திரம் பழத்தை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இரும்புச்சத்து குறைபாடு நீங்கும். ரத்த சோகை பிரச்சினை வராமல் தவிர்க்கப்படும். மேலும் இதை சாப்பிடுவதன் மூலம் சருமம் பொலிவாகும். நரம்பு தளர்ச்சி குணமாகும். குழந்தைகளுக்கு தருவதன் மூலம் நல்ல தூக்கத்தையும் ரத்த உற்பத்தியும் அதிகரிக்கும்.
மேலும் இது ஞாபக சக்தியை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவு மருத்துவ குணம் மிகுந்த நேந்திரம் பழத்தை வைத்து நாம் நம்முடைய வீட்டில் இனிப்பு வகைகளை செய்து தரலாம். அதிலும் குறிப்பாக நேந்திரம் பழத்தை வைத்து ஜாமூன் செய்து தரும் பொழுது யாருமே வேண்டாம் என்று கூறவே மாட்டார்கள். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நேந்திரம் பழத்தை வைத்து எப்படி நேந்திரம் பழ ஜாமூன் செய்வது என்றுதான் பார்க்கப் போகிறோம்.
– Advertisement –

தேவையான பொருட்கள்

தண்ணீர் – 1/2 டம்ளர்
சர்க்கரை – 500 கிராம்
குங்குமப்பூ – ஒரு கிராம்
ஏலக்காய் – 2 சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை
நேந்திரம் பழம் – 2
நெய் பொரிப்பதற்கு – தேவையான அளவு

செய்முறை
முதலில் ஜீராவை தயார் செய்து கொள்வோம். இதற்கு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். சர்க்கரை நன்றாக கரைந்த பிறகு நூல் பதம் வரும். அந்த நூல் பதம் வந்தவுடன் அதில் குங்குமப்பூ, ஏலக்காய், உப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
குங்குமப்பூ இல்லை என்றாலும் பரவாயில்லை ஏலக்காய் மற்றும் உப்பை மட்டும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரை முழுவதும் கரையும் வரை அடுப்பில் வைத்திருங்கள். குறைந்த தீயில் தான் வைத்திருக்க வேண்டும். அவப்பொழுது அடுப்பில் இருக்கக்கூடிய இந்த ஜீராவை கிண்டி விட்டுக் கொண்டு இருக்க வேண்டும்.
– Advertisement –

இப்பொழுது நேந்திரம் பழத்தின் தோலை நீக்கிவிட்டு ஒரு இன்ச் அகலத்திற்கு நேந்திரம் பழத்தை நறுக்கிக் கொள்ளுங்கள். ஜீரா தயாரானதும் ஜீராவை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடுங்கள். இப்பொழுது அடுப்பில் வேறொரு பாத்திரத்தை வைத்து அதில் நேந்திரம் பழத்தை பொறிக்கும் அளவிற்கு தேவையான அளவு நெய்யை ஊற்ற வேண்டும். நெய் உருகி நன்றாக காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் நேந்திரம் பழத்தை ஒவ்வொன்றாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
குறைந்த தீயில் வைத்து நேந்திரம் பழம் நன்றாக சிவக்கும் வரை பொறிக்க வேண்டும். அவ்வப்பொழுது இரண்டு புறமும் திருப்பி போட்டுக் கொள்ள வேண்டும். இதற்கு கருப்பாக இருக்கக்கூடிய நேந்திரம் பழத்தை தான் தேர்வு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நேந்திரம் பழம் என்பது நன்றாக பழுத்திருக்கும். காயாக இருக்கும் பட்சத்தில் நெய்யில் பொரித்து எடுப்பதற்கு நேரம் எடுக்கும்.
– Advertisement –

பழமாக இருந்தால் சீக்கிரமாகவே வெந்துவிடும். நேந்திரம் பழத்தை நன்றாக சிவக்க பொறித்த பிறகு நெய்யில் இருந்து அந்த நேந்திரம் பழத்தை எடுத்து அப்படியே நாம் தயார் செய்து வைத்திருக்கும் ஜீராவில் போட்டு விட வேண்டும். மூன்று மணி நேரம் ஜீராவில் அப்படியே இருக்கட்டும். பிறகு அதை எடுத்து சாப்பிடலாம்.
இதையும் படிக்கலாமே கருப்பு உளுந்து தக்காளி சட்னி செய்முறை.
இனிமேல் வரப்போகும் காலங்களில் அதிக அளவு பண்டிகை என்பதால் இந்த பண்டிகை தினத்தில் ஆரோக்கியமான நேந்திரம் பழத்தை வைத்து இப்படி ஜாமூன் செய்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கொடுத்து மகிழலாம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top