பஞ்சு போன்ற கார்த்திகை தீப அப்பம் செய்முறை

பஞ்சு போன்ற கார்த்திகை தீப அப்பம் செய்முறை

Qries

– Advertisement –

திருக்கார்த்திகை திருநாள் அன்று அனைவரின் இல்லங்களிலும் தீபமேற்றி வழிபாடு செய்யும் வழக்கம் என்பது இருக்கும். அப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் பொழுது இறைவனுக்கு நெய்வேத்தியமாக கார்த்திகை அப்பம் தயார் செய்து வைப்போம். அப்படிப்பட்ட அப்பத்தை பலரும் பல விதங்களில் தயார் செய்வார்கள். கோதுமை மாவை பயன்படுத்தி செய்வார்கள், ரவையை பயன்படுத்தி செய்வார்கள், மைதாமாவை பயன்படுத்தி செய்வார்கள், பச்சரிசியை பயன்படுத்தி செய்வார்கள்.
அப்படி செய்யும்பொழுது அது மிருதுவாகவும் உப்பி வருவதற்காகவும் சோடா உப்பையும் பயன்படுத்துவார்கள். இந்த சோடா உப்பை பயன்படுத்தாமல் பச்சரிசியை வைத்து மிருதுவான மென்மையான கார்த்திகை தீப ஆப்பத்தை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –

தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப்வெல்லம் – 1 கப்கோதுமை மாவு – 11/2 டேபிள் ஸ்பூன்பூவன் வாழைப்பழம் – 1நெய் – 2 டேபிள் ஸ்பூன்முந்திரி – 5தேங்காய் துருவல் – 5 டேபிள்ஸ்பூன்பாசிப்பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்ஏலக்காய் – 5தண்ணீர் – 1/4 கப்
செய்முறை
முதலில் பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் தனித்தனியாக சுத்தம் செய்து ஊறவைத்து கொள்ளுங்கள். பாசிப்பருப்பு குறைந்தது அரை மணி நேரம் ஊறினால் போதும். பச்சரிசி ஒரு மணி நேரம் ஊறட்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நெய்யை ஊற்ற வேண்டும். நெய் உருகி சூடானதும் அதில் முந்திரி பருப்பை சேர்க்க வேண்டும். முந்திரி பருப்பு லேசாக சிவக்க ஆரம்பித்ததும் அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
– Advertisement –

தேங்காயின் நிறம் லேசாக மாறியதும் ஊற வைத்திருக்கும் பாசிப்பருப்பையும் ஏலக்காயையும் சேர்த்து நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். கருக விடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது இவை அனைத்தையும் நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பொடி செய்து வைத்திருக்கும் வெல்லத்தை சேர்த்து கால் கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றி பாகு கரைத்துக் கொள்ளுங்கள். இதற்கு மதம் ஒன்றும் தேவையில்லை. இதில் இருக்கக்கூடிய கசடுகளை நீக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதை செய்கிறோம்.
வெல்லம் நன்றாக காய்ந்த பிறகு இதை எடுத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது மிக்ஸி ஜாரில் நாம் ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் பாசிப்பருப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இதில் நாம் ஊற வைத்திருக்கும் பச்சரிசியையும் சேர்த்து பல்ஸ் மோடில் வைத்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள். பிறகு இதில் ஒரு வாழைப்பழத்தை சேர்த்து சிறிதளவு நாம் கரைத்து வைத்திருக்கும் வெல்லப்பாகையும் ஊற்றி மறுபடியும் ஒருமுறை அரைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

இந்த மாவு நைசாகவும் இருக்கக்கூடாது அதிக அளவில் நெருநெருவென்றும் இருக்கக் கூடாது. இரண்டிற்கும் பொதுவான தன்மையில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அப்பம் மிருதுவாக இருக்கும். அவ்வப்பொழுது சிறிது சிறிதாக நாம் கரைத்து வைத்திருந்த வெல்லக் கரைசலை வடிகட்டி அதில் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அரை மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள்.
அரை மணி நேரம் கழித்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அப்பம் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் குறைந்த தீயில் வைத்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவில் ஒரு கரண்டியை எடுத்து அப்படியே ஊற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து அடியில் வெந்ததும் அப்பம் மேலே எழும்பி வரும் அப்பொழுது ஒரு கரண்டியை வைத்து அப்பத்தை திருப்பி போட்டு நன்றாக சிவக்க வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சுவையான திரு கார்த்திகை அப்பம் தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே:பேச்சுலர்ஸ் ரெசிபி வெங்காயம் சாதம்
முருகப்பெருமானுக்கும், சிவபெருமானுக்கும் உகந்த இந்த கார்த்திகை திருநாள் அன்று அவர்களுக்கு பிடித்தமான அப்பத்தை இந்த முறையில் பஞ்சு போல மிருதுவாக செய்ய முடியும். முயற்சி செய்து பாருங்கள். வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top