– Advertisement –
தினமும் காலையில் கண் விழித்ததும் மதியத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கும் எண்ணமே பலருக்கும் வரும். இன்னும் சிலரோ இரவு படுக்கச் செல்லும் பொழுதே நாளைக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று யோசித்து அதற்குரிய முன்னேற்பாடுகளை செய்து வைப்பார்கள். ஒரு சில நேரங்களில் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அடுத்த நாளைக்குரிய முன்னேற்பாடுகளை செய்யாமல் விட்டிருந்தாலோ, மறுநாள் காலையில் எழுந்திருக்கும் பொழுது மிகவும் சிரமப்படுவார்கள்.
அதே போல் இன்னும் சிலர் காலையில் சீக்கிரம் எழுந்து வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஏதோ ஒரு சூழ்நிலையில் உடல் அசதியில் காலையில் விரைவில் எழுந்து கொள்ள முடியாமல் நேரம் கடந்து எழுந்திருப்பார்கள். அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் பதட்டமாக இருப்பார்கள். இந்த சூழ்நிலைகள் அனைத்துமே நம் வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் கண்டிப்பான முறையில் அனுபவித்து இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மிகவும் எளிதில் அதே சமயம் சுவையான ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
புதினா – அரைக்கட்டு,கொத்தமல்லி – 2 கைப்பிடி அளவு,பச்சை மிளகாய் – 2,சோம்பு – ஒரு டீஸ்பூன்,எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,நெய் – ஒரு டீஸ்பூன்,பட்டை – 2,கிராம்பு – 2,ஏலக்காய் – 1,அரிசி – 300 கிராம்,முந்திரி – 10,வெங்காயம் – 2,தக்காளி – 1,இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டேபிள் ஸ்பூன், பட்டாணி – 100 கிராம்,கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்,தண்ணீர் – 5 கப்,உப்பு – தேவையான அளவு,எலுமிச்சம் பழம் – அரைப்பழம்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் புதினா, கொத்தமல்லி, இரண்டு பச்சை மிளகாய், சோம்பு இவற்றை சேர்த்து சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை, நெய் இரண்டையும் சேர்த்து, இரண்டும் நன்றாக சூடான பிறகு அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்க்க வேண்டும்.
– Advertisement –
பிறகு அதில் முந்திரி பருப்பையும் சேர்த்து முந்திரிப்பருப்பு லேசாக சிவந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு நாம் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்திருக்கும் விழுது, இஞ்சி பூண்டு பேஸ்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு இதில் கரம் மசாலாவையும் சேர்த்து இதன் பச்சை வாடை அனைத்தும் போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
இப்பொழுது இதன் பச்சை வாடை முற்றிலும் நீங்கிய பிறகு இதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் அரிசி மற்றும் பட்டாணியை போட்டு அதில் தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பையும் போட்டு கடைசியாக அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு மூடி விட வேண்டும். மிதமான தீயில் வைத்து இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். மிகவும் எளிதில் அதேசமயம் சுவையான பட்டாணி புதினா சாதம் தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே:சுவையான முள்ளங்கி பொரியல் செய்முறை
நேரமின்மை காரணமாக பலரும் மதிய உணவை கடையில் சாப்பிட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். எவ்வளவு நேரம் தாமதமானாலும் இனிமேல் இந்த முறையில் மதிய உணவு தயார் செய்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும் சுவையாகவும் இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam