
– Advertisement –
வெண்ணெய் மற்றும் நெய் வீட்டிலேயே தயார் செய்வதற்கு பசும்பால் இருந்தால் தான் செய்ய முடியும் என்று கிடையாது. அன்றாடம் நாம் பயன்படுத்தும் பாக்கெட் பாலிலேயே தரமான வெண்ணெய் மற்றும் நெய் எடுக்க முடியும். ஒரு சில விஷயங்களை நிதானமாக கடைப்பிடித்தால், நீங்களும் வீட்டிலேயே சுலபமாக இந்த முறையில் வெண்ணெய் மற்றும் நெய் எடுக்கலாம். அதை எப்படி எடுப்பது? என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் அறிந்து கொள்ள போகிறோம் வாருங்கள்.
நீங்கள் தினமும் 1 லிட்டர் அளவிற்கு ஃபுல் கிரீம் பால் காய்ச்சி பயன்படுத்துபவர்கள் என்றால், 1 வாரத்திற்குள் 100 கிராம் அளவிற்கு தரமான வெண்ணெய் எடுத்து விடலாம். தினமும் நீங்கள் முதலில் பாலை காய்ச்சும் பொழுது சற்று குறைவாக தண்ணீர் ஊற்றி காய்ச்ச வேண்டும். ரொம்பவும் தண்ணீர் ஊற்றினால் பால் ஏடு கம்மியாக கிடைக்கும். நன்கு பால் காய்ச்சியதும் தட்டை வைத்து முழுமையாக மூடாமல் சிறிது காற்று போகுமாறு இடைவெளி விட்டு மூடுங்கள்.
– Advertisement –
பால் கொஞ்சம் ஆறியதும் ஏடு கட்ட ஆரம்பித்து விடும். தட்டை முழுமையாக மூடினால் நீர் துளிகள் பட்டு, சரியாக ஏடு கிடைக்காது. மேலே மிதக்கும் ஏட்டை மட்டும் தனியே பிரித்து எடுத்து ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் சேர்த்து கொள்ளுங்கள். எவ்வளவு எடுத்தீர்களோ, அந்த அளவிற்கு தயிரையும் சேர்த்து இறுக்கமாக மூடாமல் காற்று புகுமாறு லேசாக மூடி பிரிட்ஜில் வையுங்கள். இது போல ஒரு வாரம் வரை ஏட்டை பிரித்து அதனுடன் சம அளவு தயிரையும் சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விட்டு ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
ஒரு வாரம் சேர்த்த பின்பு அதை மிக்சர் ஜாரில் சேர்த்து பல்ஸ் மோடில் ஒரு சுற்றி சுற்றிக் கொள்ளுங்கள். பின்பு அதில் ஐஸ் கட்டி அல்லது ஐஸ் தண்ணீரை ஊற்றி இரண்டு நிமிடம் மிக்ஸியை ஓட்டுங்கள். இது போல ஐந்து நிமிடம் இடைவெளி விட்டுவிட்டு மிக்ஸியை இயக்க வேண்டும். சிறிது சிறிதாக மிக்ஸியை இப்படி இயக்கினால் தான் வெண்ணெய் உருண்டு திரண்டு வரும். அவசரப்படக் கூடாது, நிதானமாக செய்ய வேண்டும்.
– Advertisement –
ஏழு, எட்டு முறை மிக்ஸியை ஒரு நிமிடம் ஓட்டி எடுத்த பின்பு வெண்ணெய் நடுவில் தனியாக திரண்டு உருண்டையாக வரும். இந்த சமயத்தில் வெண்ணெயை கைகளால் உருட்டி எடுத்து சமன்படுத்தி சுத்தமான தண்ணீரில் போட்டு கழுவிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் இப்பொழுது வெண்ணெய் தயார்!
இதையும் படிக்கலாமே:மாசி 1. விஷ்ணுபதி புண்ணிய காலம் 2025
தயார் செய்து வைத்துள்ள இந்த தரமான வெண்ணெயை அடுப்பில் பாத்திரத்தில் வைத்து உருக்கினால், நெய் கிடைக்கும். நெய் உருக்கும் பொழுது அதில் கொஞ்சம் முருங்கைக் கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் சீக்கிரம் கெட்டுப் போகாது. இப்பொழுது நெய் ஆறியதும் வடிகட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பாக்கெட் பால் பயன்படுத்துபவர்கள், அதிக நாட்கள் ஏட்டை சேகரிக்க முடியாது. அதிகபட்சம் 10 நாட்கள் வரை எடுத்து வைத்து சேகரித்து இது போல தயார் செய்து கொள்ளுங்கள். இப்படி நெய் எடுப்பதால் பாக்கெட் பால் வாங்கும் செலவில் பாதி நமக்கு கிடைத்து விடும், ட்ரை பண்ணி பாருங்க.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam