
– Advertisement –
வாரத்திற்கு ஒருமுறை மாவை அரைத்து வைத்து விட்டோம் என்றால் தினமும் காலையிலும் மாலையிலும் இட்லி, தோசை என்று ஊத்தி கொடுத்து முறையை கழித்து விடலாம் என்று நினைப்போம். எதிர்பாராத விதமாக சில நேரங்களில் மாவு தீர்ந்திருக்கும் அதை கவனிக்காமல் விட்டவர்கள் அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி போய் இருப்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் வீட்டில் இருக்கக்கூடிய பாசிப்பருப்பை வைத்து எளிமையான முறையில் சுவையான பாசிப்பருப்பு தக்காளி தோசை செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு – ஒரு கப்தக்காளி – 2காய்ந்த மிளகாய் – 3ரவை – 1/2 கப்உப்பு – தேவையான அளவு
– Advertisement –
செய்முறை
பாசிப்பருப்பை சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி அதனுடன் இரண்டு தக்காளி, காய்ந்த மிளகாய், ரவை, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி விட வேண்டும். இப்பொழுது இந்த மாவு தோசை ஊற்றுவதற்கு தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
தேவைப்பட்டால் இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் தோசை கல்லை வைத்து கல் நன்றாக சூடானதும் தோசை மாவை எடுத்து தோசை ஊற்ற வேண்டும். ஒரு நிமிடம் கழித்து இந்த தோசையை சுற்றி எண்ணெய் அல்லது நெய் ஊற்றி ஒருபுறம் நன்றாக வெந்த பிறகு திருப்பி போட்டு மறுபுறமும் சிவக்க வேகவிட்டு எடுத்து வைத்து விட வேண்டும். அவ்வளவுதான் பாசிப்பருப்பு தக்காளி தோசை தயாராகி விட்டது.
– Advertisement –
இது மிகவும் சுவையாக இருக்கும். இந்த பாசிப்பருப்பு தோசைக்கு காரசாரமாக இருக்கக்கூடிய ஏதாவது ஒரு சட்னியை செய்து வைத்தால் போதும். தோசை ஊற்ற ஊற்ற காலியாகி கொண்டே இருக்கும். இந்த மாவை புளிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உடனே அரைத்து உடனே தோசை ஊத்தி சாப்பிட்டு விடலாம். அதே சமயம் உடல் எடையை குறைக்க வேண்டும், அரிசி சம்பந்தப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது என்று இருப்பவர்களும் இந்த தோசையை எந்தவித தடையும் இல்லாமல் சாப்பிடலாம்.
இதையும் படிக்கலாமே:நெல்லிக்காய் தொக்கு செய்முறை
எப்பொழுதும் ஒரே மாதிரி தோசை ஊற்றி வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுப்பதற்கு பதிலாக சற்று மாறுதலாக சுவை மிகுந்த இந்த பாசிப்பருப்பு தோசையையும் ஊற்றிக் கொடுத்துப் பாருங்கள். பாசிப்பருப்பு தோசை தான் வேண்டும் என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஒரு முறை முயற்சி செய்துதான் பாருங்களேன்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam