பாசிப்பருப்பு ரிப்பன் பக்கோடா செய்முறை | pasiparuppu ribbon pakoda seimurai in tamil

பாசிப்பருப்பு ரிப்பன் பக்கோடா செய்முறை | pasiparuppu ribbon pakoda seimurai in tamil

Qries

– Advertisement –

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாலை நேரத்தில் ஏதாவது ஒரு சிற்றுண்டியை சாப்பிட வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அதுவும் குறிப்பாக டீ காபி குடிக்கும் பொழுது சேர்த்து சாப்பிட்டோம் என்றால் அது இன்னும் நன்றாகவே இருக்கும் என்றுதான் நினைப்பார்கள். மேலும் பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி வரும் குழந்தைகளுக்கு அந்த நேரத்தில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். அப்படிப்பட்ட நேரத்தில் வீட்டிலேயே இருக்கக்கூடிய பொருட்களை வைத்து எளிமையான முறையில் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தின்பண்டங்கள் பல வகைகளில் இருந்தாலும் அவை இனிப்பு புளிப்பு காப்பு என்று அறுசுவைகளில் இருந்தாலும் சில பொருட்கள் மட்டும் நம் மனதை விட்டு நீங்காமல் இருக்கும். அதோடு மிகவும் முக்கியமான ஒன்று நம் நாவில் இருந்து அதன் சுவை மாறவே மாறாது. அப்படிப்பட்ட ஒரு பொருளாக திகழ்வதுதான் ரிப்பன் பக்கோடா. ரிப்பன் பக்கோடா வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து எப்படி வீட்டிலேயே எளிமையாக தயார் செய்வது என்று பார்ப்போம்.
– Advertisement –

தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு – ஒரு கப்தண்ணீர் – 3 கப்பச்சரிசி – 4 கப்எள் – ஒரு டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுபெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்மிளகாய் தூள் – 1 1/2 ஸ்பூன்
செய்முறை
முதலில் குக்கரில் பாசிப்பருப்பை போட்டு அதை இரண்டு முறை சுத்தமாக கழுவி ஊற்றிவிட்டு தண்ணீரை ஊற்றி ஐந்து விசில் வரும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். அதாவது பாசிப்பருப்பு நன்றாக குழைய வேக வேண்டும். ஒரு தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டில் பச்சரிசி மாவு நான்கு கப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
– Advertisement –

பிறகு அதில் கருப்பு அல்லது வெள்ளை எள், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய் தூள் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இது அனைத்தும் நன்றாக கலந்த பிறகு நாம் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பு எடுத்து மைய அரைத்து அந்த விழுதையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்றாக முறுக்கு மாவு பதத்திற்கு வரும் வரை பிணைந்து வைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தேவைப்பட்டால் மட்டும் தண்ணீரை சிறிதளவு தெளித்து மாவை நன்றாக பிணைந்து வைத்துக் கொள்ளலாம். பிறகு ரிப்பன் அச்சை முறுக்கு பிழியும் உரலில் போட்டு மாவை எடுத்து அந்த அச்சில் போட்டு ரிப்பன் பக்கோடா பிழிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் குறைந்த தீயில் வைத்து நாம் பிழிந்து வைத்திருக்கும் ரிப்பன் பக்கோடாவை எடுத்து எண்ணெயில் போட வேண்டும். ஒரு புறம் நன்றாகவே சிவந்த பிறகு அதை திருப்பி போட்டு மறுபுறமும் நன்றாக வேக வைக்க வேண்டும். அவ்வளவுதான் ரிப்பன் பக்கோடா தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: முள்ளங்கி போண்டா செய்முறை
வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை மட்டுமே வைத்து இந்த முறையில் மாலை நேரத்தில் சிற்றுண்டிகளை செய்து தருவதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் உடல் ஆரோக்கியத்துடனும் மனநிறைவுடனும் இருப்பார்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top