
– Advertisement –
தை மாதம் பிறக்கப்போகிறது. தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருவிழாவாக அனைவரும் கொண்டாடுவோம். அனைவரின் இல்லங்களிலும் சூரியப் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபாடு செய்வோம். சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், அவியல், கூட்டு, சாம்பார் என்று பலவிதமான பொருட்களை செய்து வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் என்பது நம் அனைவருக்கும் இருக்கும்.
பலரும் தைத்திருநாள் அன்று காலையில் சூரிய உதய சமயத்தில் விறகு அடுப்பை வைத்து அதற்கு மேல் பானை வைத்து இந்த சர்க்கரை பொங்கலை செய்வார்கள். இன்னும் சிலரோ அடுப்பு வைக்காமல் கேஸ் அடுப்பிலேயே சர்க்கரை பொங்கல் செய்து வழிபாடு செய்வார்கள். எந்த அடுப்பாக இருந்தாலும் எந்த பானையாக இருந்தாலும் பாரம்பரிய முறைப்படி எப்படி பொங்கல் செய்தால் அது சுவையாகவும் மணமாகவும் இருக்கும் என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
பொன்னி பச்சரிசி – ஒரு கப்பாசிப்பருப்பு – 1/2 கப்கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்வெல்லம் – 2 கப்நெய் – 1/2 கப்பால் – 1/2 கப்முந்திரி – 10திராட்சை – 1 1/2 டேபிள் ஸ்பூன்நறுக்கிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்ஜாதிக்காய் தூள் – ஒரு சிட்டிகைபச்சை கற்பூரம் – ஒரு சிட்டிகை
செய்முறை
முதலில் எந்த பானையில் நம் பொங்கல் வைக்க போகிறோமோ அந்த பானையை சுத்தம் செய்து அதில் மஞ்சள் கொத்தை கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு அந்தப் பானையில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் மஞ்சள் குங்குமம் வைத்து க்கொள்ள வேண்டும். அடுத்ததாக பச்சரிசியை ஒருமுறை மட்டும் தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பாசிப்பருப்பை போட்டு சிவக்க வறுத்து அதையும் ஒருமுறை தண்ணீர் ஊற்றி கழுவி பச்சரிசியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
இந்த பச்சரிசியும் பாசிப்பருப்பும் ஊறுவதற்கு ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். கடலைப்பருப்பையும் ஒரு முறை தண்ணீர் ஊற்றி கழுவி ஊறவைத்துக் கொள்ளுங்கள். கடலைப்பருப்பு அரைமணி நேரம் ஊற வேண்டும். பச்சரிசியும் பாசிப்பருப்பும் 20 நிமிடம் ஊறினால் போதும். 20 நிமிடம் கழித்து அடுப்பில் பானையை வைத்து அதில் காய்ச்சாத பாலை ஊற்ற வேண்டும். பிறகு நாம் அரிசி ஊற வைத்த தண்ணீரில் இருந்து ஒரு கப் அளவிற்கு தண்ணீரை சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஐந்து கப் அளவிற்கு சாதாரண தண்ணீரை சேர்த்து அதற்கு மேல் ஒரே ஒரு அருகம்புல்லை விநாயகரை முழுமனதோடு நினைத்து போட்டு அடுப்பை பற்ற வைக்க வேண்டும்.
இது நன்றாக பொங்கி ஊற்றிய பிறகு அடுப்பை குறைந்த தீயில் வைத்துக்கொண்டு நாம் ஊற வைத்திருந்த பச்சரிசி பாசிப்பருப்பு கடலைப்பருப்பு அனைத்தையும் சேர்த்து ஒரு முறை கரண்டியை வைத்து நன்றாக கிண்டி விடுங்கள். அரிசி நன்றாக வேகும் வரை அவ்வப்பொழுது கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அரிசி நன்றாக வெந்த பிறகு தான் வெல்லத்தை சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அரிசியும் பருப்பும், வேகாமல் போய்விடும்.
– Advertisement –
வெல்லம் சுத்தமான வெல்லமாக இருக்கும் பட்சத்தில் அதை அப்படியே சேர்த்துக் கொள்ளலாம். ஒருவேளை அதில் கசடி இருக்கிறது என்றால் சிறிது சுடு தண்ணீரை வைத்து அதில் வெல்லத்தை போட்டு கரைத்து இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி தண்ணீர் ஊற்றி கரைத்து வெல்லப்பாகாக சேர்க்கும் பட்சத்தில் பொங்கலுக்கு வைக்கக்கூடிய தண்ணீரின் அளவை சற்று குறைத்துக் கொள்ளுங்கள். அரைக்கப் அளவிற்கு தண்ணீரை வெல்லத்தில் சேர்ப்பதாக இருக்கும் பட்சத்தில் இந்த பொங்கலில் ஊற்றிய தண்ணீரில் இருந்து அரை கப் அளவு தண்ணீரை குறைத்துக் கொள்ள வேண்டும். வெல்லம் நன்றாக கரைந்த பிறகு இதில் கால் கப் அளவிற்கு நெய்யை ஊற்றி மறுபடியும் நன்றாக கலந்து விடுங்கள். அடுத்ததாக ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள், பச்சை கற்பூரம் இவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.
இப்பொழுது பானையை அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு அந்த அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் மீதம் இருக்கக்கூடிய நெய்யை ஊற்றி முந்திரிப்பருப்பு நறுக்கிய தேங்காய் இரண்டையும் சேர்க்க வேண்டும். பிறகு திராட்சையும் சேர்த்து அனைத்தும் நன்றாக சிவந்து பொன்னிறமாக வரும்பொழுது அடுப்பில் இருந்து இறக்கி பொங்கலில் ஊற்றி நன்றாக ஒரு முறை கலந்து விட வேண்டும். மிகவும் மணமான சுவையான சர்க்கரை பொங்கல் தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே:நைவேத்திய சர்க்கரை பொங்கல் ரெசிபிநம்முடைய முன்னோர்கள் செய்த பாரம்பரியமான முறையில் நாமும் பொங்கல் திருநாள் அன்று பொங்கல் வைத்து குடும்பத்துடன் உண்டு மகிழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam