– Advertisement –
பாகற்காய் என்றதும் ஐயோ அது கசப்பாக இருக்கும் என்று இந்தக் காயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒதுக்கி வைப்பார்கள். ஆனால் இந்த காயில் பல அற்புதமான மருத்துவ குணம் நிறைந்து இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு இந்த பாகற்காய் பெரிதும் துணை புரிகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைக்கு நல்ல தீர்வாக திகழ்கிறது. அதோடு மட்டுமல்லாமல் உடல் எடையை குறைப்பதற்கும் பாகற்காய் மிகவும் உதவுகிறது.
இதில் ஆன்டிஆக்சைடு அதிகம் இருப்பதால் ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்ற ஆற்றல் மிக்கதாக திகழ்கிறது. மேலும் பாகற்காயை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் கண், தோல், தசைகள், நரம்பு மண்டலங்கள் போன்றவை அனைத்தும் சீராக செயல்படும். இந்த பாகற்காயை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இனிப்பாக எப்படி பாவக்காய் பச்சடி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
பாகற்காய் – 1/4 கிலோவெங்காயம் – 2புளி – எலுமிச்சை அளவுநாட்டு சர்க்கரை – 50 கிராம்சாம்பார் தூள் – 2 டேபிள் ஸ்பூன்தேங்காய் துருவல் – 1/2 மூடிகருவேப்பிலை – சிறிதளவுமஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்கடுகு – ஒரு டீஸ்பூன்சீரகம் – ஒரு டீஸ்பூன்உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பாகற்காயை விதைகளை நீக்கிவிட்டு சற்று பெரியதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம் இவற்றை போட வேண்டும்.
– Advertisement –
கடுகு வெடித்ததும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் கருவேப்பிலையை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும். பிறகு பாகற்காயை அதில் சேர்த்து நன்றாக வதக்குங்கள். இரண்டு நிமிடம் பாகற்காயை வதக்கி விட்டு அதில் சாம்பார் தூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு இவற்றை சேர்த்து மூடி போட்டு நன்றாக வேக விடுங்கள்.
அந்த எண்ணெயிலேயே பாகற்காய் வெந்து விட வேண்டும். பிறகு மூடியை திறந்து அதில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். நாட்டுச் சர்க்கரை நன்றாக கரைந்த பிறகு கரைத்து வைத்திருக்கும் புளியையும் ஊற்றி தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி மூடி போட்டு வேக விட வேண்டும்.
– Advertisement –
ஐந்து நிமிடம் நன்றாக வெந்து பாகற்காய் சுருங்கியதும் இதில் துருவி வைத்திருக்கும் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலந்து ஒரு நிமிடம் வேகவைத்து பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் அறுசுவை மிகுந்த பாகற்காய் பச்சடி தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: ஸ்பெஷல் கோதுமை தோசை செய்முறை
இந்த பச்சடியில் கசப்பு, இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு என்று அறுசுவைகளும் கலந்து இருப்பதால் ஒரு முறையாவது இப்படி நாம் முயற்சி செய்து சாப்பிட்டு பார்ப்போமே..
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam