பிரட் போண்டா செய்முறை | bread ponda preparation in tamil

பிரட் போண்டா செய்முறை | bread ponda preparation in tamil

Qries

– Advertisement –

மற்ற நேரங்களில் நாம் எதை சாப்பிடுகிறோமோ இல்லையோ மாலை நேரத்தில் டீ குடிக்கும் பொழுது மட்டும் ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற தோன்றும். இது நமக்கு ஒரு புத்துணர்ச்சியை தரக்கூடியதாக கூட திகழும். மேலும் அலுவலகம் விட்டு வருபவர்களும் சரி, பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று விட்டு வருபவர்களும் சரி அந்த நேரத்தில் டீயுடன் ஏதாவது ஒரு ஸ்னாக்ஸை சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி சாப்பிடுவதற்கு எந்த வித ஸ்னாக்ஸும் இல்லை என்னும் பட்சத்தில் பிரெட்டும் ஒரு உருளைக்கிழங்கும் இருந்தால் போதும். மிகவும் சுவையான போண்டாவை செய்து கொடுத்துவிடலாம். இந்த பிரட் போண்டாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
பிரட் – 10 துண்டுவெங்காயம் – 2பச்சை மிளகாய் – 2உருளைக்கிழங்கு – ஒன்றுஇஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு ஸ்பூன்உப்பு – தேவையான அளவுமிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்,கொத்தைமல்லி பொடியாக நறுக்கியது – ஒரு கைப்பிடி அளவுஎண்ணெய் – பொறிப்பதற்கு தேவையான அளவு
– Advertisement –

செய்முறை
முதலில் சுத்தமான தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பிரட் துண்டுகளை நனைத்து தண்ணீர் இல்லாமல் நன்றாக பிளிந்து வேறு ஒரு பாத்திரத்தில் உதிர்த்து விட்டுக் கொள்ளுங்கள். இப்பொழுது நீளவாக்கில் வெங்காயத்தை நறுக்கி அதை நன்றாக உதிர்த்து பிரட்டுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு பொடி ஆக நறுக்கிய மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு உருளைக்கிழங்கு எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு கேரட் துருவுவது போல் துருவி நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் பிளிந்து அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், அரிசி மாவு, மஞ்சள் தூள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். விருப்பம் இருப்பவர்கள் இதனுடன் சோம்பு தூளையும் சேர்த்துக் கொள்ளலாம். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையும் தூவி தண்ணீர் எதுவும் சேர்க்காமல் நன்றாக பிணைய வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு மட்டும் தண்ணீரை தெளித்து பிணைந்து கொள்ளுங்கள். அதிக அளவில் தண்ணீர் இதற்கு சேர்க்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
– Advertisement –

இவ்வாறு நன்றாக பிணைந்த பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து போண்டா பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதை குறைந்த தீயில் வைத்துக்கொண்டு இந்த மாவை சிறு சிறு போண்டாவாக உருட்டி எண்ணெயில் சேர்க்க வேண்டும். போண்டா நன்றாக வெந்து சிவந்த பிறகு அதை அப்படியே எண்ணெயில் இருந்து எடுத்து வடிகட்டி ஸ்நாக்ஸ் ஆக தந்துவிடலாம். மிகவும் எளிதில் விரைவாக செய்யக்கூடிய ஒரு பிரட் உருளைக்கிழங்கு போண்டா தயாராகிவிட்டது. இதை அப்படியே உதிர்த்து விட்டு எண்ணெயில் போட்டால் பக்கோடாவாக மாறிவிடும்.
இதையும் படிக்கலாமே:கொண்டைக்கடலை சாலட் ரெசிபி
சிரமப்பட்டு பலவிதமான ஸ்நாக்ஸ்களை செய்வதற்கு பதிலாக இப்படி எளிதில் விரைவில் செய்யக்கூடிய ஸ்நாக்ஸ்களை செய்து தருவதன் மூலம் அதன் சுவையும் நன்றாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடவும் செய்வார்கள். ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top