
– Advertisement –
பலரும் தங்களுடைய மாலை நேரத்தில் டீ காபி குடிக்கும் பொழுது ஏதாவது ஒரு திண்பண்டம் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி ஆசைப்படக்கூடிய பொருட்களுள் ஒன்றாக திகழ்வதுதான் வடை. வடை செய்வதற்கு உளுந்தை ஊறப்போட்டு பக்குவமாக அரைத்து வடை சுட்டால் தான் வடையாக இருக்கும். அப்படி பக்குவம் சற்று மாறிவிட்டால் கூட அது வடையாகவே இருக்காது. சமையலே தெரியாதவர்கள் கூட முறுமுறுவென்று மெதுவடை செய்வதற்கு பிரெட்டும் ரவையும் இருந்தால் போதும். அதை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
பிரட் – 8 துண்டுதயிர் – 2 கரண்டிஉப்பு – தேவையான அளவுரவை – 50 கிராம்அரிசி மாவு – 125 கிராம்கொத்தமல்லி நறுக்கியது – ஒரு கைப்பிடி அளவுகுக்கிங் சோடா – ஒரு சிட்டிகைவெங்காயம் – ஒன்றுகருவேப்பிலை – ஒரு கொத்துபச்சை மிளகாய் -4,இஞ்சி – ஒரு இன்ச்எண்ணெய் பொரிப்பதற்கு – தேவையான அளவு
– Advertisement –
செய்முறை
முதலில் பிரட்டின் ஓரங்களை நறுக்கி நீக்கிவிட்டு நடுவில் இருக்கக்கூடிய பகுதியை மட்டும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு இதில் இரண்டு குழிக்கரண்டி அளவிற்கு கெட்டியான தயிரை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு, ரவை, அரிசி மாவு, கொத்தமல்லி போன்றவற்றை சேர்த்து நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் நன்றாக பிணைந்து பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை மற்றும் குக்கிங் சோடா இவற்றையும் சேர்த்து நன்றாக மறுபடியும் பிணைய வேண்டும். இது வடை மாவு பதத்திற்கு வந்துவிடும். ஒருவேளை பிரட் நன்றாக ஊறி மாவு பதத்திற்கு வரவில்லை எனில் திரும்பவும் சிறிதளவு தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள். வடை மாவு பதத்திற்கு வந்த பிறகு இதை அப்படியே பத்து நிமிடம் மூடி போட்டு ஊற வைத்து விட வேண்டும்.
– Advertisement –
பத்து நிமிடம் கழித்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து வடை பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் லேசாக சூடானதும் குறைந்த தீயில் வைத்து எப்பொழுதும் நாம் உளுந்த வடை எப்படி செய்வோமோ அதே போல் மாவை எடுத்து நன்றாக உருட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் போட்டு விட வேண்டும். இந்த வடை உடனே நிறம் மாறிவிடும் என்பதால் அதிக அளவு எண்ணெயை சூடு செய்யக்கூடாது. அதேபோல் குறைந்த தீயில் வைத்து தான் வேக விட வேண்டும். மூன்றில் இருந்து நான்கு நிமிடத்தில் வடை நன்றாக சிவந்துவிடும் இரண்டு புறமும் திருப்பிப் போட்டு எடுத்து பரிமாறி விடலாம். உளுந்த வடை போல் ஓட்டை போட தெரியாது என்பவர்கள் இதே மாவை வைத்து போண்டாவாகவும் செய்து சாப்பிடலாம்.
இதையும் படிக்கலாமே:ரவை அல்வா செய்முறை
வடை சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்தால் இனிமேல் உளுந்தை ஊற போட்டு அரைக்காமல் இப்படி பிரட் துண்டுகளை வைத்து எளிமையான முறையில் விரைவில் வடை செய்து விடலாம். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam