பிரண்டை குழம்பு செய்முறை | Pirandai kulambu recipe in tamil

பிரண்டை குழம்பு செய்முறை | Pirandai kulambu recipe in tamil

Qries

– Advertisement –

உணவே மருந்து என்று கூறக்கூடிய நம்முடைய பாரம்பரியத்தில் பலரும் இன்றைய காலத்தில் மருந்தை உணவாக எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதை தவிப்பதற்கு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய ஆரோக்கியம் மிகுந்த பொருட்களை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழ முடியும். அந்த வகையில் பிரண்டையை வைத்து செய்யக்கூடிய ஒரு குழம்பை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
பிரண்டையில் அதிக அளவு கால்சியம் சக்தி இருக்கிறது என்பதால் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் பிரண்டையை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் விரைவிலேயே கூடி வலுமை பெறும். இதோடு மட்டுமல்லாமல் சோர்வோடு இருப்பவர்களுக்கு பிரண்டையை தருவதன் மூலம் அவர்கள் சுறுசுறுப்பாக திகழ்வார்கள். ஞாபக சக்தி அஅதிகரிக்கும். பசியை தூண்டும். உயரத்த அழுத்தம் இருப்பவர்களும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களும் பிரண்டையை அடிக்கடி தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதே போல் பிரண்டையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் வராது என்றும், மூட்டு வலிகள் அனைத்தும் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.
– Advertisement –

தேவையான பொருட்கள்

பொடியாக நறுக்கிய பிரண்டை – ஒரு கப்
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு உளுந்து – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 15
கருவேப்பிலை – ஒரு கொத்து
தக்காளி – ஒன்று
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு

செய்முறை
முதலில் பிரண்டையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிரண்டையின் நான்கு புறங்களிலும் இருக்கும் நாரை உரித்து விட்டு அதை பொடியாக நறுகி கொள்ள வேண்டும். இந்த பிரண்டை குழம்பிற்கு பிஞ்சான பிரண்டையை உபயோகப்படுத்துவது மிகவும் நல்லது. இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பிரண்டையை அதில் சேர்த்து பிரண்டையின் நிறம் மாறி சுருங்கும் வரை அடுப்பிலேயே வைத்து நன்றாக எண்ணெயில் வதக்க வேண்டும்.
பிரண்டையின் நிறம் நன்றாக மாறிய பிறகு அந்த பிரண்டையை எண்ணையிலிருந்து தனியாக எடுத்து ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இதே எண்ணெயில் கடுகு உளுந்து, வெந்தயம் இரண்டையும் சேர்த்து வெந்தயம் நன்றாக சிவந்த பிறகு வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை போன்றவற்றை சேர்த்து இவை அனைத்தும் நன்றாக சிவக்கும் வரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும்.
– Advertisement –

இவை அனைத்தும் நன்றாக சிவந்த பிறகு நாம் ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் பிரண்டையை சேர்த்து பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் இவை அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும். மசாலாவாடை நீங்கி பிறகு புளியை கரைத்து அதில் ஊற்ற வேண்டும்.
ஐந்து நிமிடம் மூடி போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். இப்பொழுது மூடியை திறந்து பார்க்கும் பொழுது எண்ணெய் தனியாக பிரிந்து கொதித்துக் கொண்டே இருக்கும். இந்த சூழ்நிலையில் அடுப்பை அணைத்து விடலாம். பிரண்டை குழம்பு தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே இன்ஸ்டன்ட் தோசை ரெசிபி
பல வகைகளில் பிரண்டையை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ள முடியும். இப்படி சேர்ப்பதன் மூலம் நம்முடைய உடலும் ஆரோக்கியமாக இருக்கும். விருப்பம் இருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top