– Advertisement –
பணியாரம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது? சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பணியார பிரியர்கள் தான். பணியாரத்தை எப்படி கொடுத்தாலும் ரசித்து ருசித்து சாப்பிட்டு விடலாம், அதிலும் இந்த பீட்ரூட் மற்றும் பன்னீர் சேர்த்த பணியாரம் அட்டகாசமான சுவையை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. சுவையான பீட்ரூட் பன்னீர் பணியாரம் செய்வது எப்படி? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
பீட்ரூட் பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:
துருவிய பீட்ரூட் – அரை கப்
துருவிய பன்னீர் – அரை கப்
இட்லி மாவு – 2 கப்
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை – ஒரு கொத்து
மல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
நெய் அல்லது எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
பீட்ரூட் பணியாரம் செய்முறை விளக்கம்:
பீட்ரூட் பணியாரம் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பவுலில் இரண்டு கப் அளவிற்கு இட்லி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ரெண்டு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.
– Advertisement –
ரெண்டு பச்சை மிளகாயை காம்பு நீக்கி பொடி பொடியாக நறுக்கி சேருங்கள். பின் இவற்றுடன் ஒரு கொத்து கருவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். அதே போல மல்லித் தழைகளையும் பொடி பொடியாக நறுக்கி சேருங்கள். இப்பொழுது ஒரு சிறிய மீடியம் சைஸ் அளவிலான பீட்ரூட்டை துருவி எடுத்துக் கொள்ளுங்கள். அதையும் இந்த மாவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கடைசியாக அரை கப் அளவிற்கு நன்கு மெலிதாக துருவிய பன்னீரை எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். அவ்வளவுதான் இப்பொழுது பணியார மாவு ரெடி! பணியார சட்டியை அடுப்பில் வைத்து காய விடுங்கள். சட்டி காய்ந்ததும் அதில் நெய் அல்லது எண்ணெய் நன்கு தாராளமாக ஊற்றிக் கொள்ளுங்கள்.
– Advertisement –
பின்பு ஒவ்வொரு குழியிலும் மாவை எடுத்து ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வையுங்கள். நன்கு ஒருபுறம் வெந்ததும், மறுபுறம் திருப்பி போடுங்கள். பணியாரம் ஒன்று போல சிவக்க வெந்து வந்ததும் தட்டில் வைத்து பரிமாற வேண்டியது தான். இந்த சுவையான பீட்ரூட் பன்னீர் பணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரொம்பவே விரும்பி சாப்பிடக் கூடியதாக இருக்கிறது.
இதையும் படிக்கலாமே:கடன் சுமை தீர நவதானிய பரிகாரம்
பீட்ரூட் பன்னீர் பணியாரத்துடன் காரசாரமான காரச் சட்னி, இஞ்சி சட்னி, மிளகாய் சட்னி,, வெங்காய சட்னி போன்றவை இருந்தால் அட்டகாசமாக இருக்கும். நீங்களும் வீட்டில் இதே மாதிரி பீட்ரூட் இருந்தால் சட்டுனு செஞ்சு பாருங்க, எல்லோரும் விரும்பி உண்பார்கள், தட்டு நிறைய கொடுத்தாலும் சாப்பிட்டுகிட்டே இருப்பார்கள்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam