– Advertisement –
புதினா சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் என்று சொல்லுவார்கள். புதினா சட்னி செய்தால் அதை தொட கூட மாட்டாங்க. புதினா சேர்த்த நெய் பொங்கல், செய்து ஒரு முறை வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள். எப்போதும் சாதாரண பொங்கல் செய்வதை விட, வித்தியாசமாக இப்படி வாசம் நிறைந்த ரெசிபிகளை சமைக்கும்போது, வீட்டில் இருப்பவர்களுக்கு சாப்பிட ஒரு ஆர்வம் வரும். தேங்காய் சட்னியோடு சுட சுட புதினா பொங்கல் செய்தால் இந்த சுவை ஒரு வாரத்திற்கு நாக்கை விட்டு போகாது. ரெசிபி பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
– Advertisement –
பச்சரிசி – 1 கப்பாசிப்பருப்பு – 1/2 கப்தண்ணீர் – 5 டம்ளர்நெய் – 5 டேபிள்ஸ்பூன்
புதினா – 1 கைப்பிடி அளவுபச்சை மிளகாய் – 1இஞ்சி தோல் சீவியது – 2 இன்ச் மிளகு – 1/2 ஸ்பூன்சீரகம் – 1 ஸ்பூன்முந்திரி – 10
– Advertisement –
உப்பு – தேவையான அளவுபெருங்காயம் – 1/4 ஸ்பூன்கருவேப்பிலை – 1 கொத்து
செய்முறை:
ஒரு குக்கரில் பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் போட்டு லேசாக சூடாகும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை மூன்றில் இருந்து நான்கு முறை நன்றாக கழுவி விட்டு, 5 டம்ளர் தண்ணீரை ஊற்றி, இரண்டு ஸ்பூன் நெய் விட்டு, குக்கரை மூடி 5 லிருந்து 6 விசில் விட்டு, குழைய குழைய வேக வைத்துக் கொள்ளுங்கள். குக்கர் விசில் வரட்டும்.
– Advertisement –
இதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளவும். அதில் புதினா இலைகள் ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அறைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு தாளிப்பு கடாயை அடுப்பில் வைத்து 3 ஸ்பூன் நெய் விட்டு அதில் மிளகு, சீரகம், முந்திரி பருப்பு, ஒரு கொத்து கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை அதில் சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும். அரைத்த விழுதை வதக்கும்போது அது நமக்கு நன்றாக திக்காக கிடைக்கும். அப்போது அடுப்பை அணைத்துவிட்டு, இதில் இரண்டு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து கலந்து விடவும்.
இதையும் படிக்கலாமே: தஞ்சாவூர் ஒரப்பு அடை செய்முறை
இதற்குள் குக்கரில் பொங்கல் குழைய குழைய வெந்திருக்கும். தேவையான அளவு உப்பு தூள் தூவி, வதக்கி வைத்திருக்கும் இந்த புதினா தொக்கு தாளிப்பை, பொங்கலில் ஊற்றி நன்றாக கலந்து பரிமாறினால் சுடச்சுட புதினா பொங்கல் தயார். இதற்கு தேங்காய் சட்னி சாம்பார் கூட ஒரு உளுந்து வடை இருந்தால், இன்னும் சிறப்பு. இந்த வித்தியாசமான பொங்களை ஒரு முறை உங்க வீட்லயும் ட்ரை பண்ணி பாருங்க. ஆரோக்கியத்திற்கும் இது ரொம்ப ரொம்ப நல்லது.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam