பூண்டு மிளகாய் சாதம் செய்முறை | chilli garlic rice recipe in tamil

பூண்டு மிளகாய் சாதம் செய்முறை | chilli garlic rice recipe in tamil






– Advertisement –

இன்றைய காலத்தில் பலரும் அவசர அவசரமாக ஏதாவது ஒரு சமையலை செய்து எடுத்துக் கொண்டு செல்கிறார்கள். இன்னும் சிலருக்கோ சமைப்பதற்கு நேரமில்லை என்பதற்காகவே கடைகளில் வாங்கி சாப்பிடும் அவல நிலையும் உண்டாகி இருக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்கு மிகவும் எளிமையான முறையில் விரைவில் செய்யக்கூடிய பல உணவுப் பொருட்கள் இருக்கின்றன. அந்த வகையில் பூண்டை உரித்து வைத்திருந்தால் போதும் சாதத்தை வடித்து இந்த லஞ்ச் ரெசிபியை செய்துவிடலாம். மிகவும் எளிதில் விரைவில் செய்யக்கூடிய பூண்டு மிளகாய் சாதத்தை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
பூண்டு – 1/4 கப்,மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்கருவேப்பிலை – ஒரு கொத்துதக்காளி – 2உப்பு – தேவையான அளவுகொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவுவடித்த சாதம் – 2 கப்
– Advertisement –

செய்முறை
முதலில் ஒரு இடி கல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தோல் உரித்த பூண்டு பற்களை சேர்த்து அதனுடன் மிளகாய் தூளையும் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளுங்கள். இதை இடித்து தான் செய்ய வேண்டும். மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க கூடாது. இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் நல்லெண்ணையை ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நாம் இடித்து வைத்திருக்கும் பூண்டு பற்களை அதில் சேர்த்து நன்றாக எண்ணையில் வதக்க வேண்டும்.
பிறகு இதில் மஞ்சள் தூள், கறிவேப்பிலையும் சேர்த்து வதக்க வேண்டும். இது அனைத்தும் நன்றாக வதங்கி பூண்டின் பச்சை வாடை போன பிறகு இதில் இரண்டு தக்காளியை நன்றாக அரைத்து ஊற்றி வதக்க வேண்டும். பிறகு இதில் தேவையான அளவு உப்பை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளியில் இருந்து எண்ணெய் தனியாக பிரிந்து வந்த பிறகு நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் சாதத்தை இதில் சேர்த்து கொத்தமல்லி தழையையும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கலந்து விட வேண்டும்.
– Advertisement –

சாதமும் பூண்டு தொக்கும் நன்றாக ஒன்றோடு ஒன்று கலந்த பிறகு இதை அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் மிகவும் சுவையான பூண்டு மிளகாய் சாதம் தயாராகி விட்டது. இதற்கு நாம் அப்பளத்தை தொட்டுக் கொள்ளலாம். அதேபோல் தயிர் பச்சடியையும் தொட்டுக் கொள்ளலாம். பேச்சுலராக தங்கி இருப்பவர்கள் ஒரு முறை சாதம் வடித்த பிறகு மீதம் இருக்கும் சாதத்தையும் இப்படி பூண்டு மிளகாய் சாதமாக தயார் செய்து வைத்து உபயோகப்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே:பிரட் ரவை வடை செய்முறைநம்முடைய நேரத்திற்கு தகுந்தார் போல் சமையல் செய்ய முடியும் என்பதால் நேரமின்மையை காரணம் காட்டி வெளியில் சாப்பிடாமல் இப்படி எளிமையான உணவுப் பொருட்களை தயார் செய்து சாப்பிடலாம். முயற்சி செய்து பாருங்கள்.

– Advertisement –








Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top