பேச்சுலர்ஸ் ரெசிபி வெங்காயம் சாதம் | Bachelors recipe vengaya sadham

பேச்சுலர்ஸ் ரெசிபி வெங்காயம் சாதம் | Bachelors recipe vengaya sadham

Qries

– Advertisement –

பெரும்பாலும் பேச்சுலர்ஸ் அதிகமாக செய்யக் கூடிய ரெசிபிகள் சுலபமானதாகவும், சுவையாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். அந்த வகையில் பேச்சுலர்ஸ் அதிகம் விரும்பும் வெங்காய சாதம் இப்படி நாமும் வீட்டில் ட்ரை பண்ணி பார்க்கலாமே! பத்து நிமிடத்தில் செய்து அசத்தக்கூடிய இந்த வெங்காய சாதம் சாப்பிடும் பொழுதே வாயில் எச்சிலை ஊற வைக்கும். அந்த அளவிற்கு சுவையாக செய்யக்கூடிய இந்த வெங்காய சாதம் எப்படி செய்யலாம்? என்பதை தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்ப்போம் பாருங்கள்.
வெங்காய சாதம் செய்ய தேவையான பொருட்கள் :
சமையல் எண்ணெய் – நான்கு டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
சோம்பு – கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று
பெரிய வெங்காயம் – மூன்று
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
குழம்பு மிளகாய்த்தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு போட்டு வடித்த சாதம் – ஒரு ஆழாக்கு
வெங்காய சாதம் செய்முறை விளக்கம் :
வெங்காய சாதம் செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ரெசிபிக்கு கால் கிலோ அரிசியை உப்பு சேர்த்து வேக வைத்து சாதமாக வடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வாய் அகன்ற வாணலி ஒன்றை எடுத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.
– Advertisement –

எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். அதன் பின்னே சோம்பு மற்றும் சீரகத்தையும் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின் காரத்திற்கு தேவையான பச்சை மிளகாயை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி விடுங்கள். இதனுடன் மீடியம் சைஸ் பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காய சாதம் என்பதால் கூடுதலாக வெங்காயம் தேவைப்பட்டால் நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள், இன்னும் நன்றாக இருக்கும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கி வரும் பொழுது மசாலா பொருட்களை சேர்க்க வேண்டும். குழம்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள், தனி மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை முறையே மேற்கூறிய அளவின்படி சேர்த்துக் கொள்ளுங்கள். கூடவே ஒரு கொத்து கருவேப்பிலையை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி போட்டுக் கொள்ளுங்கள். மசாலா வாசம் போக ஒரு முறை நன்கு வதக்கி விட்டதும், அடுப்பை லோ ஃப்லேமில் வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

இதையும் படிக்கலாமே:கார்த்திகை தீப விளக்கு காற்றில் அணையாமல் இருக்க டிப்ஸ்
வடித்த சாதத்தை கொஞ்சம் போல் ஆறியதும், இந்த கலவையுடன் சேர்த்து ஒருமுறை நன்கு பிரட்டி விடுங்கள். சாதத்தில் உப்பு சேர்க்காதவர்கள் இந்த சமயத்தில் உப்பு சேர்த்து நன்கு பிரட்டியதும், சாதத்தை சமன் செய்து அப்படியே மூடி போட்டு விடுங்கள். புளி சாதம், லெமன் சாதம் போன்றவை நன்கு ஊறியதும் தான் ருசி அதிகமாக இருக்கும். அது போல இது ரெண்டு மணி நேரத்திற்கு பிறகு சாப்பிடும் பொழுது அவ்வளவு சுவையாக, சூப்பராக இருக்கும். ரொம்பவும் எளிமையாக இருக்கக் கூடிய இந்த ரெசிபியை நாமும் வீட்டில் செய்து பார்த்து, குழந்தைகளை அசத்தலாம். இந்த சாதத்துடன் முட்டை ஆம்லெட் அல்லது அப்பளம், வத்தல் இருந்தால் சூப்பராக இருக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top