மசாலா குழி பணியாரம் ரெசிபி | Masala kuzhi paniyaram recipe

மசாலா குழி பணியாரம் ரெசிபி | Masala kuzhi paniyaram recipe

Qries

– Advertisement –

நம் எல்லோருக்கும் தோசை என்றாலே மசாலா தோசை தான் முதலில் நினைவுக்கு வரும். அருமையாக உருளைக்கிழங்கு மசாலாவை உள்ளே பேக் செய்து சாப்பிடும் பொழுது, நாவூற செய்யும். அதே போல இந்த குழிப்பணியாரம் ரெசிபியும் அசத்தலான சுவையில், வித்தியாசமாகவும் இருக்க போகிறது. வெளியே மெத்தென்ற மிருதுவான மாவும், உள்ளே ஸ்டஃப் செய்யப்பட்டுள்ள மசாலாவும் சேர்த்து சாப்பிடும் பொழுது தொட்டுக்க கூட எதுவுமே தேவையில்லை, அப்படியே சாப்பிடலாம். அந்த அளவிற்கு சுவையில் பிரமாதமாக இருக்கக் கூடிய இந்த மசாலா குழிப்பணியாரம் ரெசிபி சுலபமாக எப்படி தயாரிப்பது? என்பதை தான் தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவில் அறிந்து கொள்ள போகிறோம் வாருங்கள்.
மசாலா குழி பணியாரம் செய்ய தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு – கால் கிலோகடலை எண்ணெய் – தேவையான அளவுகடுகு – அரை ஸ்பூன்சீரகம் – அரை ஸ்பூன்பச்சை மிளகாய் – ஒன்றுகருவேப்பிலை – ஒரு கொத்துதக்காளி – ஒன்றுமஞ்சள் தூள் – கால் ஸ்பூன்பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுகொத்தமல்லி – சிறிதளவுஇட்லி மாவு – தேவையான அளவு
– Advertisement –

மசாலா குழி பணியாரம் செய்முறை விளக்கம் :
மசாலா குழி பணியாரம் செய்ய தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கால் கிலோ உருளைக்கிழங்கை சுத்தம் செய்து இரண்டாக வெட்டி ஒரு குக்கரில் போட்டு மூன்று விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு பேன் வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கடலை எண்ணெய் ஊற்றுங்கள்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும், ஜீரகம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போடுங்கள். ஒரு பச்சை மிளகாயை துண்டு துண்டாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள். ஒரு பெரிய தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி மசிந்து வந்ததும் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு தேவையான அளவிற்கு போட்டு பிரட்டி விடுங்கள்.
– Advertisement –

பின்னர் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டி விடுங்கள். கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சேர்த்து கலந்து விடுங்கள். அவ்வளவுதான் இப்பொழுது மசாலா தயார்! இப்போது பணியார கல்லை அடுப்பில் வைத்து காய வையுங்கள். கல் காய்ந்ததும் குழிகளில் கொஞ்சம் போல் கடலை எண்ணெய் விட்டு பாதி அளவிற்கு மாவை விட வேண்டும். பின்பு தயார் செய்து வைத்துள்ள மசாலாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து மாவில் போடுங்கள். பின்னர் குழியை மீதி மாவை ஊற்றி மூடுங்கள்.
இதையும் படிக்கலாமே:சனி பகவானால் வரும் பாதிப்பிலிருந்து விலக பதிகம்
இப்பொழுது ஒருபுறம் சிவக்க வெந்ததும், மறுபுறம் திருப்பி போட வேண்டும். இரண்டு புறமும் பொன்னிறமாக சிவந்து வந்ததும், சூடாக எடுத்து பரிமாற வேண்டியது தான். காரச் சட்னி, வெங்காய சட்னி ஆகியவற்றுடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும், இந்த மசாலா குழி பணியாரத்தை நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி, வீட்டில் இருக்கும் எல்லோரின் பாராட்டையும் பெறலாமே!

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top