
குழந்தைகளுக்கு பள்ளிகள் தொடங்கி விட்டன. காலையில் வீட்டை விட்டு செல்லக்கூடிய குழந்தைகள் மாலை நேரத்தில் மிகவும் சோர்வோடு வீடு திரும்புவார்கள். வீட்டிற்கு வந்தவுடன் திரும்பவும் வேறு ஏதாவது ஒரு பயிற்சிக்காக வெளியே செல்ல வேண்டிய நிலையும் இருக்கும். அப்படிப்பட்ட குழந்தைகள் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் அதேசமயம் எந்தவித சோர்வும் இல்லாமல் செயலாற்றுவதற்கு அவர்களுக்கு போதுமான அளவு சத்துக்கள் வேண்டும் அல்லவா? அந்த சத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக திகழ்வதுதான் மரவள்ளி கிழங்கு. அப்படியே வேகவைத்து தரும்பொழுது பல குழந்தைகள் அதை சாப்பிட மறுப்பார்கள். நம்மால் அதிக அளவில் சாப்பிட முடியாது. ஆனால் இப்படி போண்டாவாக செய்து கொடுத்தோம் என்றால் விறுவிறுவென்று சாப்பிட்டு விடுவார்கள். அந்த மரவள்ளி கிழங்கு போண்டாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.தேவையான பொருட்கள்மரவள்ளி கிழங்கு – 1/2 கிலோதேங்காய் துருவியது – ஒரு கப்வெங்காயம் – 50 கிராம்பச்சை மிளகாய் – 6கடலை மாவு – 25 கிராம்மைதா மாவு – 25 கிராம்அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்உப்பு – 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்எண்ணெய் பொறிப்பதற்கு – தேவையான அளவு – Advertisement -செய்முறைமுதலில் மரவள்ளிக்கிழங்கில் சிறிது உப்பை சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு நன்றாக ஆறியதும் அதை சுத்தம் செய்து கேரட் துருவுவது போல் துருவியும் கொள்ளலாம் அல்லது நன்றாக மசித்தும் கொள்ளலாம். இப்பொழுது இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சிறிதளவு மட்டும் உப்பு சேர்த்து நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும். விருப்பம் இருப்பவர்கள் இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லிகொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.இவை அனைத்தையும் நன்றாக பிணைந்து உருண்டை போல் உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இதற்கு வெளிப்புற மாவிற்கு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள் மீதம் இருக்கக்கூடிய உப்பு, மிளகாய்த்தூள் போன்றவற்றை போட்டு சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக கெட்டியாக கரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நாம் உருட்டி வைத்திருக்கும் மரவள்ளி கிழங்கு உருண்டையை இந்த போண்டா மாவில் நன்றாக போட்டு ஓர் இடம் விடாமல் எல்லா இடத்திலும் தடவிக் கொள்ளுங்கள். – Advertisement – அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் குறைந்த தீயில் வைத்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் போண்டாவை அதில் போட வேண்டும். ஒரு புறம் நன்றாக சிவந்த பிறகு அதை திருப்பி போட்டு மறுபடியும் வேகவிட்டு எண்ணையிலிருந்து எடுத்து விடலாம். அவ்வளவுதான் சுவையான மரவள்ளிக்கிழங்கு போட்டா தயார் ஆகிவிட்டது. இதற்கு தொட்டுக் கொள்வதற்கு கொத்தமல்லி சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.இதையும் படிக்கலாமே: கொண்டைக்கடலை மோர் குழம்புவளரும் குழந்தைகளுக்கு ஏற்ற கிழங்காக திகழக்கூடிய மரவள்ளிக்கிழங்கை இப்படி போண்டாவாக செய்து தரும்பொழுது குழந்தைகள் அதை விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam