
– Advertisement –
குளிர்காலம் வந்துவிட்டாலே எல்லோருக்கும் சளி பிடிக்க ஆரம்பித்து விடுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். எப்பேர்ப்பட்ட சளியையும் அறுத்து வெளியேற்றக் கூடிய சக்தி இந்த மருந்து குழம்புக்கு உண்டு. ரொம்பவே எளிதான முறையில் அருமையான ருசியில் மணக்க மணக்க மருந்து குழம்பு எப்படி பாரம்பரியமான பாட்டி ஸ்டைலில் தயாரிப்பது? என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தொடர்ந்து காணலாம் வாருங்கள்.
மருந்து குழம்பு செய்ய தேவையான பொருட்கள் :நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்கடுகு – கால் ஸ்பூன்உளுந்து – கால் ஸ்பூன்வெந்தயம் – கால் ஸ்பூன்கருவேப்பிலை – ஒரு கொத்துபூண்டு – 15 பல்சின்ன வெங்காயம் – 15புளி – நெல்லிக்காய் அளவுஉப்பு – தேவையான அளவுவெல்லம் – ஒரு துண்டு
– Advertisement –
மருந்து குழம்பு வைக்க வறுத்து அரைக்க தேவையான பொருட்கள் :மல்லி விதைகள் – 3 ஸ்பூன்மிளகு – 3/4 ஸ்பூன்சீரகம் – 3/4 ஸ்பூன்வெந்தயம் – 3/4 ஸ்பூன்கடுகு – 3/4 ஸ்பூன்உளுந்து – 1 ஸ்பூன்ஓமம் – 1/2 ஸ்பூன்சுக்கு – ஒரு துண்டுவிரலி மஞ்சள் – அரை துண்டுபெருங்காயம் – புளிக்கொட்டை அளவுவரமிளகாய் – 3கருவேப்பிலை – இரண்டு கொத்து
மருந்து குழம்பு செய்முறை விளக்கம் : மருந்து குழம்பு செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அடிகனமான வாணலி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அரைக்க வேண்டிய பொருட்களை எல்லாம் இப்போது வறுத்து அரைக்க வேண்டும். முதலில் மல்லி விதைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும். முறையே மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு, உளுந்து, ஓமம் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். 2 இன்ச் அளவிற்கு சுக்கு துண்டு, விரலி மஞ்சள், பெருங்காயம், வரமிளகாய் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றை ஆற வைத்து ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே கடாயில் கருவேப்பிலையை சேர்த்து லேசாக மொறு மொறு என்று வறுத்து மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டியதுதான். அரைத்த இந்த பவுடரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
இப்போது அடுப்பில் நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து பொரிய விட்டு வெந்தயம், கருவேப்பிலையை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் பூண்டு பற்களை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதன் பின் சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி விடுங்கள். இந்த குழம்பு செய்ய தக்காளி எதுவும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பவுடரில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்து பச்சை வாசம் போக வதக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
மசாலா வாசம் போனதும், ஒரு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை கரைத்து, அந்த சாற்றை அதில் சேர்க்க வேண்டும். கடைசியாக தேவையான அளவிற்கு உப்பு போட்டு கொதிக்க விடுங்கள். கெட்டியாக கிரேவி போல திக்காக வர வேண்டும். திக்கான கன்சிஸ்டெண்சிக்கு வந்த பிறகு நறுக்கிய மல்லித்தழை தூவி, கொஞ்சம் போல் வெல்லம் போட்டு இறக்கி விடுங்கள். அப்படியே சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். சளி, கபம், ஜுரம் என்று எதுவுமே அண்டாது. அந்த அளவிற்கு ஆரோக்கியத்தை சீராக்கக் கூடிய இந்த மருந்து குழம்பு நீங்களும் இப்படியே தயார் செய்து அசத்துங்கள்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam