மஸ்ரூம் பெப்பர் மசாலா செய்முறை | mushroom pepper masala seimurai in tamil

மஸ்ரூம் பெப்பர் மசாலா செய்முறை | mushroom pepper masala seimurai in tamil


– Advertisement –

சில பேருக்கு அசைவ சாப்பாடு என்பது மிகவும் பிடிக்கும். அசைவம் இருந்தால் அதற்கு ஏற்றார் போல் ஒரு கையாவது அதிகமாக சாப்பிடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு சைவத்தை செய்து கொடுத்தால் சாப்பாடு சாப்பிட விரும்ப மாட்டார்கள். இதற்காகவே பலரும் அசைவ சுவைக்கு ஆசைப்பட்டு கடைகளுக்கு சென்று சாப்பிடும் வழக்கம் இருக்கும்.
அசைவ சுவையில் மஷ்ரூமை வைத்து மிகவும் எளிமையான முறையில் சிக்கன் மட்டன் இவற்றின் சுவையை மிஞ்சும் அளவிற்கு செய்யக்கூடிய ஒரு மஷ்ரூம் பெப்பர் மசாலாவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
– Advertisement –

தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 15மிளகு – 2 டீஸ்பூன்சீரகம் – 1/2 டீஸ்பூன்சோம்பு – 1/2 டீஸ்பூன்புதினா – சிறிதளவுஎண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்பெரிய வெங்காயம் – ஒன்றுகாய்ந்த மிளகாய் – ஒன்றுகருவேப்பிலை – ஒரு கொத்துதக்காளி – ஒன்றுஇஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்மல்லித்தூள் – ஒரு டீஸ்பூன்கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுமஸ்ரூம் – 350 கிராம்கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், சோம்பு, புதினா இவற்றை சேர்த்து நன்றாக நைசா விழுதுபோல அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
– Advertisement –

அடுத்ததாக அதில் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை இவற்றை சேர்த்து வெங்காயம் வதங்கும் வரை நன்றாக வதக்க வேண்டும். பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் இவற்றையும் சேர்த்து இதன் பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். அடுத்ததாக இதில் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு இவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதை இதனுடன் சேர்த்து சிறிதளவு மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றி அதையும் கழுவி இதனுடன் சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக வதக்க வேண்டும். மூன்று நிமிடம் கழித்து நறுக்கி வைத்திருக்கும் மஷ்ரூமை சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கலந்து விட்டுக் கொள்ளுங்கள். பிறகு மூடி போட்டு பத்து நிமிடம் வேக விடுங்கள்.
– Advertisement –

பத்து நிமிடம் கழித்து மூடியை திறந்து கொத்தமல்லி தழையை தூவி நன்றாக கிளறி இறக்கி விட வேண்டும். மிகவும் சுவையான மஸ்ரூம் பெப்பர் மசாலா தயாராகி விட்டது.
இதையும் படிக்கலாமே:டீக்கடை மசால் வடை செய்முறை
மஷ்ரூமை செய்து கொண்டிருக்கும் பொழுதே சிக்கனா மட்டனா என்று கேட்கும் அளவிற்கு வாசனையும் அசைவ வாசனையாகவே இருக்கும். சாப்பிடும் பொழுதும் யாரும் மஸ்ரூம் என்று கண்டுபிடிக்காத அளவிற்கு இதன் சுவையும் அபாரமாக இருக்கும். ஒரு முறை இந்த முறையில் மஷ்ரூமை செய்து பாருங்கள்.

– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top