மாம்பழ புலிச்சேரி செய்முறை | Mambala pulisery recipe in tamil

மாம்பழ புலிச்சேரி செய்முறை | Mambala pulisery recipe in tamil

Qries

– Advertisement –

ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றார்போல் ஒவ்வொரு வகையான பழங்களும் காய்கறிகளும் கிடைக்கும். அந்த காலகட்டத்தில் அந்த பழங்களையும் காய்கறிகளையும் நாம் முறையாக பயன்படுத்தி நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்து கொள்வதன் மூலம் நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் ஏற்படும். அந்த வகையில் இந்த காலகட்டத்தில் மாம்பழ சீசன் என்பது இருக்கும்.
இப்பொழுது மாம்பழ சீசன் முடியும் காலம் வந்துவிட்டது. முடிவதற்குள் மாம்பழத்தை பயன்படுத்தி செய்யக்கூடிய உணவு வகைகளை நாம் செய்து தருவதன் மூலம் திரும்பவும் எப்பொழுதும் ஆம்பள சீசன் வரும் இப்படி செய்து தருவார்கள் என்று வீட்டில் இருக்கும் அனைவரும் ஏங்கும் அளவிற்கு சுவை பிரமாதமாக இருக்கும். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் கேரளாவில் மிகவும் பிரபலமாக செய்யக்கூடிய ஒரு குழம்பான மாம்பழ புலிச்சேரியை எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.
– Advertisement –

தேவையான பொருட்கள்

மாம்பழம் – ஒன்று
தயிர் – 200 எம்எல்
தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 25
காய்ந்த மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 2 பல்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிது

செய்முறை
முதலில் மாம்பழத்தை சற்று பெரியதாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதில் பச்சை மிளகாய் சேர்த்து 150 எம்எல் தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடம் நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள். மாம்பழம் குழையக் கூடாது. அந்தளவிற்கு குறைந்த தீயில் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் தேங்காய், சீரகம், பூண்டு, நான்கு சின்ன வெங்காயம், மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். மாம்பழம் வெந்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் இந்த விழுதையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி மூடி போட்டு இரண்டு நிமிடம் வேக வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் மற்றும் சீரகத்தின் பச்சை வாடை போக வேண்டும். இதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

தயிரை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக ஒரு முறை அடித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் மற்றும் சீரகத்தின் பச்சை வாடை போன பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். இந்த குழம்பு நன்றாக ஆரிய பிறகுதான் இதில் நாம் தயிரை சேர்க்க வேண்டும். இது நன்றாக ஆரிய பிறகு இதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தயிரை சேர்த்து ஒரு முறை கலந்து விட்டுக் கொள்ளுங்கள்.
இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகை சேர்க்க வேண்டும். கடுகு வெடித்ததும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்க்க வேண்டும். பிறகு காய்ந்த மிளகாயை இரண்டாக கிள்ளி போட வேண்டும். அடுத்ததாக சிறிதளவு கருவேப்பிலையும் சேர்த்து வெங்காயம் நன்றாக வதங்கும் வரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும்.
– Advertisement –

இது நன்றாக வதங்கியதும் இதை அப்படியே எடுத்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாம்பழ மோர் குழம்பில் சேர்த்து விட வேண்டும் பிறகு ஒரு முறை நன்றாக கலந்து விட்டால் கேரளா ஸ்பெஷல் மாம்பழ புலிச்சேரி தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: ராகி ரவா உப்புமா செய்முறை
10 நிமிடம் மட்டுமே ஆகக்கூடிய இந்த குழம்பை அவசரம் என்ற நேரத்திலோ அல்லது வீட்டில் இருப்பவர்கள் நன்றாக சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் பொழுதும் இந்த முறையில் செய்து கொடுக்க நன்றாக சாப்பிடுவார்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top