
– Advertisement –
விட்டமின் ஏ, விட்டமின் பி5, விட்டமின் பி6, விட்டமின் பி9, விட்டமின் சி, விட்டமின் கே, கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற உயிர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றாக திகழ்வதுதான் முட்டைகோஸ், இதை பொறியலாகவோ கூட்டாகவோ சாப்பிடுவதில் அதிக அளவில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
முட்டைகோசை அதிக அளவில் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கண் கோளாறுகள்நீங்கும். உடலில் இருக்கும் சர்க்கரை அளவை சீராக பார்த்துக் கொள்ள உதவும். மேலும் ரத்த அழுத்தத்தை சரிசமமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த முட்டைக்கோசை பயன்படுத்தி மாலை நேர சிற்றுண்டியாக முட்டைகோஸ் பக்கோடாவை எப்படி செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
முட்டை கோஸ் நறுக்கியது – ஒரு கப்கொத்தமல்லி – 2 டேபிள்ஸ்பூன்பச்சை மிளகாய் – 2கருவேப்பிலை – ஒரு கொத்துஇஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்சீரகத்தூள் – ஒரு ஸ்பூன்மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்கடலை மாவு – 2 ஸ்பூன்அரிசி மாவு – ஒரு ஸ்பூன்கான்பிளவர் மாவு – ஒரு ஸ்பூன்பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்உப்பு – தேவையான அளவுஎண்ணெய் பொறிப்பதற்கு – தேவையான அளவு
செய்முறை
முதலில் முட்டைக்கோசை நீளவாக்கில் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். நறுக்கிய இந்த முட்டைகோசை ஒரு அகலமான பாத்திரத்தில் நன்றாக உதிர்த்து விட வேண்டும். பிறகு இதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை இவற்றை சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
இப்பொழுது இதில் சீரகத்தூள், மிளகாய் தூள், மிளகுத்தூள் போன்றவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். முட்டைகோஸில் தண்ணீர் சத்து அதிகமாக இருக்கிறது என்பதால் நாம் தண்ணீர் தெளிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. நம் நன்றாக கலந்து விடும்பொழுது அதிலிருந்து நீர் வெளிப்பட்டு மசாலா அனைத்தும் கோஸில் கலந்து விடும். பிறகு இதில் கடலை மாவு, அரிசி மாவு, கான்பிளவர் மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக அழுத்தி மசாலா அனைத்து கோஸிலும் படும்படி அழுத்தி பிணைய வேண்டும்.
அரிசி மாவை விட கான்பிளவர் மாவு சற்று குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிணைந்த பிறகு ஐந்து நிமிடம் மூடி போட்டு மூடி வைத்து விடுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்த அதில் ஒரு கடாயை வைத்து பக்கோடா பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணையை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அடுப்பை குறைந்த தீயில் வைத்து நாம் ஊற வைத்திருந்த முட்டைகோஸ் பக்கோடா மாவை எடுத்து எண்ணெயில் போட வேண்டும். அவ்வாறு எண்ணெயில் போடும் பொழுது கெட்டியாக போடாமல் உதிர்த்து விட்டு போட வேண்டும். இப்படி போடுவதன் மூலம் மிகவும் மொறு மொறுப்பாக பக்கோடா நமக்கு கிடைக்கும்.
– Advertisement –
இதை ஒருநாள் தயார் செய்து வைத்தாலே மூன்று நாள் வரை உண்ணலாம் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது சாப்பிட ஏதாவது இருக்குமா? என்று ஏங்குவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த மாதிரி எளிமையான ஆரோக்கியமான ஒரு பக்கோடாவை செய்து தருவதன் மூலம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதையும் படிக்கலாமே:இன்ஸ்டன்ட் தயிர் சட்னி
கடைகளில் இருந்து தேவையற்ற பொருட்களை வாங்கி குழந்தைகளும் பெரியவர்களும் சாப்பிடுவதை விட இந்த முறையில் வீட்டிலேயே ஆரோக்கியமான சிற்றுண்டிகளை செய்து சாப்பிடலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam