
– Advertisement –
விதவிதமான பக்கோடா வகைகளில் நமக்கு ஆல் டைம் ஃபேவரட்டாக ரொம்பவும் பிடித்தது வெங்காய பக்கோடாவாகத் தான் இருக்கும். பக்கோடா என்று சொன்னாலே அது தான் ஞாபகத்திற்கும் வரும். ஆனால் பக்கோடாக்களில் நிறைய விதங்கள் உண்டு. அந்த வகையில் முட்டை கொண்டு அருமையான மொறுமொறு பக்கோடா எப்படி செய்வது? அதுவும் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுலபமான முறையில் செய்யும் முறையைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.
முட்டை பக்கோடா செய்ய தேவையான பொருட்கள் :
முட்டை – இரண்டுகடலை மாவு – ஒன்றரை டேபிள்ஸ்பூன்பெரிய வெங்காயம் – ஒன்றுபச்சை மிளகாய் – ஒன்றுதுருவிய இஞ்சி – அரை டேபிள்ஸ்பூன்ஆப்ப சோடா – ஒரு சிட்டிகைஉப்பு – தேவையான அளவுமிளகுத்தூள் – 1/4 ஸ்பூன்மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன்சமையல் எண்ணெய் – தேவையான அளவு
– Advertisement –
முட்டை பக்கோடா செய்முறை விளக்கம் :
சூப்பரான சுவையில் இந்த முட்டை பக்கோடா செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பௌலில் ரெண்டு முட்டைகளை உடைத்து ஊற்றுங்கள். ஒரு பீட்டர் பயன்படுத்தி நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இதனுடன் ஒன்றரை டேபிள் ஸ்பூன் அளவிற்கு கடலை மாவை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து விட வேண்டும்.
பின் ஒரு மீடியம் சைஸ் பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய பச்சை மிளகாயை காம்பு நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேருங்கள். அரை டேபிள் ஸ்பூன் அளவிற்கு இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவி போட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு சிட்டிகை அளவிற்கு ஆப்ப சோடா எனப்படும் பேக்கிங் சோடாவை சேர்த்துக் கொள்ளுங்கள். பின் கடைசியாக தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
– Advertisement –
கலந்து வைத்துள்ள இந்த மாவை ஒரு ஓரமாக வையுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் வாணலி ஒன்றை வைத்து பக்கோடா பொரிக்க தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் தயார் செய்து வைத்துள்ள மாவை ஒரு ஸ்பூன் பயன்படுத்தி பக்கோடா போல கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:அதிர்ஷ்டம் தரும் வளர்பிறை சஷ்டி தீபம்
முட்டை சேர்த்து இருப்பதால் நன்கு சுவையாக மொறு மொறு என்று கிரிஸ்பியாகவும் இருக்கும். பக்கோடா சிவந்து வெந்து வந்ததும், அதனை தனியாக ஒரு பவுலில் எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் கடைசியாக கொஞ்சம் மிளகாய் தூள் மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கலந்து விடுங்கள். அவ்வளவுதான், வித்தியாசமான சுவையில் அருமையான முட்டை பக்கோடா இப்போது தயாராகிவிட்டது. ஈவினிங் ஸ்னாக்ஸ் போல குழந்தைகளுக்கு இப்படி ஈசியாக செய்து கொடுங்கள், அவர்கள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். எல்லோருக்கும் பிடித்த இந்த முட்டை பக்கோடா செய்வது ரொம்பவே சுலபம் என்பதால் நீங்களும் இப்படி ட்ரை பண்ணி பாருங்க, உங்க வீட்டில் கிச்சன் கில்லாடி என்று பேர் வாங்குங்க.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam