– Advertisement –
பல அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட முள்ளங்கியை நாம் நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் பலருக்கும் இந்த முள்ளங்கியின் வாடை என்பது துளி கூட பிடிக்காது. அதனால் அந்த முள்ளங்கியை சாப்பிடாமலேயே ஒதுக்கி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் முள்ளங்கி இருப்பதே தெரியாத அளவிற்கு செய்யக்கூடிய ஒரு முள்ளங்கி போண்டாவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
முள்ளங்கியில் நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் இருக்கின்றன. இது நம்முடைய உடல் எடையை குறைப்பதற்கும், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் உதவக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. மேலும் முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். புற்றுநோயை தடுப்பதற்கு உதவக்கூடியதாகவும் திகழ்கிறது. முள்ளங்கியில் அதிக அளவு நீர்ச்சத்து இருப்பதால் உடலுக்கு தேவையான அளவு நீர்ச்சத்தை தருவதோடு நம்மை சுறுசுறுப்பாகவும் செயலாற்ற உதவுகிறது. இது வயிறு மற்றும் கல்லீரலில் ஆரோக்கியத்தை பராமரிக்கக் கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. ரத்த அழுத்தத்தையும், ரத்த சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றாகவும் திகழ்கிறது.
– Advertisement –
தேவையான பொருட்கள்
முள்ளங்கி – 1
வெங்காயம் – 2
இஞ்சி – 1/2 இன்ச்
பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – 1
கடலை மாவு – 1/2 கப்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
சோள மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
தோசை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் முள்ளங்கியின் தோலை சீவி விட்டு அதை கழுவி கேரட் உரசுவது போல் உரசிக் கொள்ளுங்கள். இந்த முள்ளங்கி துருவலை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்க்க வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் இவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இஞ்சியை துருவி சேர்க்க வேண்டும். பூண்டை நன்றாக இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இதனுடன் கடலை மாவு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள், சோள மாவு, தேவையான அளவு உப்பு, தோசை மாவு போன்றவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும்.
– Advertisement –
தண்ணீர் துளி கூட ஊற்றவே கூடாது. முள்ளங்கியில் ஏற்கனவே தண்ணீர் சத்து அதிகம் இருக்கும். மேலும் இதில் நாம் வெங்காயம் சேர்த்து இருப்பதால் இவை அனைத்திற்கும் தேவையான அளவு தண்ணீரை வெங்காயமும், முள்ளங்கியுமே கொடுத்து விடும். இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் போண்டாவை பொரிப்பதற்கு ஏற்றவாறு எண்ணையை ஊற்றி சூடு பண்ண வேண்டும்.
எண்ணெய் நன்றாக சூடானதும் குறைந்த தீயில் வைத்து சிறு சிறு போண்டாவாக அதில் போட்டு நன்றாக வேகம் வரை குறைந்த தீயில் வைத்து விட வேண்டும். இந்த போண்டா நன்றாக சிவந்து வேந்த பிறகு இதை திருப்பி போட்டு எடுத்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான முள்ளங்கி போண்டா தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: சென்னா புலாவ் செய்முறை
மிகவும் எளிதில் சட்டு என்று செய்யக்கூடிய இந்த முள்ளங்கி போண்டாவை வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் செய்து கொடுத்துப் பாருங்கள். இதில் முள்ளங்கி எங்கே இருக்கிறது என்று கேட்கும் அளவிற்கு சுவையாக இருக்கும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam