மொறு மொறு கோதுமை தோசை ரெசிபி

மொறு மொறு கோதுமை தோசை ரெசிபி

Qries

– Advertisement –

கோதுமை தோசை என்றாலே நிறைய பேருக்கு பிடிப்பதில்லை. குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவதில்லை. வெறுமனே கோதுமை தோசை சுடாமல் இந்த முறையில், இந்த அளவுகளில் நீங்கள் சுட்டுப் பாருங்கள், இன்னும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ருசியாக இருக்கக் கூடிய இந்த கோதுமை தோசை எப்படி செய்வது? என்பதை தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கோதுமை தோசை செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – ஒரு கப்
அரிசி மாவு – அரை கப்
ரவை – இரண்டு டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்று
கருவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – ஒன்று
இஞ்சி – ஒரு துண்டு
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

கோதுமை தோசை செய்முறை விளக்கம்
ஒரு வாயகன்ற பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அரை கப் அளவிற்கு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். கொழுக்கட்டை மாவு, பச்சரிசி மாவு எந்த மாவாக இருந்தாலும் சரி தான். இவற்றுடன் வறுத்த ரவையை இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது மற்ற தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

ஒரு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய் ஒன்றை காம்பு நீக்கி சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்குங்கள். இவற்றையும் மாவுடன் சேர்த்து கலந்து விடுங்கள். பின்னர் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சீரகத்தை சேருங்கள். அரை டீஸ்பூன் அளவிற்கு மிளகை இடித்து சேர்க்க வேண்டும். ஒன்றிரண்டாக இடித்துக் கொண்டால் சரியாக வரும். பின்னர் இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலையை நன்கு கழுவி சுத்தம் செய்து உருவி பொடி பொடியாக நறுக்கி சேருங்கள். ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி விட்டு துருவி சேருங்கள்.
இப்போது தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து விட்டு தண்ணீர் ஊற்றி நீர்க்க கரைக்க வேண்டும். ரவா தோசைக்கு செய்வது போல கொஞ்சம் மாவு நீர்க்க இருந்தால் சரியாக இருக்கும். ரொம்பவும் கெட்டியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நன்கு கலந்து விட்டு அப்படியே மூடி போட்டு மூடி வையுங்கள். ஒரு 20 நிமிடம் நன்கு ஊற விட வேண்டும்.
– Advertisement –

இதையும் படிக்கலாமே:கையில் கருப்பு கயிறு கட்டும் உண்மை காரணம்
20 நிமிடம் நன்கு ஊறிய பிறகு ஒரு முறை நன்கு கலந்து விட்டு சூடாக இருக்கும் தோசை கல்லில் சுற்றிலும் ஊற்றி நடுப்புறம் கொண்டு வர வேண்டும். ரவா தோசை எப்படி சுடுவோமோ அதே போன்ற முறையில் இந்த தோசையையும் சுற்றுவாக்கில் ஊற்றி, பிறகு எண்ணெயை சுற்றிலும் ஊற்றி இரண்டு புறம் சிவக்க எடுத்தால் மொறு மொறுன்னு சூப்பரா கிரிஸ்பியான கோதுமை தோசை அழகாக வார்த்து வரும். இனி கோதுமை தோசை பிடிக்காது என்று கூறவே மாட்டார்கள். இதே போல சரியான அளவுகளில் நீங்களும் செஞ்சு பாருங்க, எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது என்பார்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top